ஹீரோ அப்பா - சிறுகதை

hero-appa-short-story
ஹீரோ அப்பா - சிறுகதை

அவனோட அப்பா ஹீரோமாதிரிதான் எல்லாமே. மடிப்புகலையாத பேண்ட் சட்டை நல்லா சேவ் பண்ணின மொகம் படிய வாரிவிட்ட தலைன்னு டிப் டாப்பாத்தான் அவன் பாத்துருக்கான். ஒத்தமகன்றதால கேட்டதெல்லாம் கொஞ்சம் 

லேட்டானாலுமிவனுக்கு வாங்கிக்குடுத்துருவாரு. ஆளுதோற்றம்தான் அப்புடி ஆனா படிப்புகம்மிதான். இவன் நல்லா படிப்பான் பொறுப்போட இருக்குறவந்தான் . இருந்தாலும் எல்லா விடலப்பயலுகளுக்கு உண்டான வெளையாட்டு ஆர்வம் அதுல கிரிக்கெட்ன்னா உசிறு.அதுக்கு கேட்டதெல்லாம் கூட வாங்கிக்குடுத்தாரு . அது எவ்வளவா இருந்தாலும் அவர் ஒரேகேள்விதான் கேப்பாரு. உனக்குப்பிடிச்சிருக்கா வேணுமான்னு ஆமான்னா எப்பாடுபட்டாலும் வாங்கிக்குடுப்பாரு. அவர் ஒரு நடுத்தரமான ஓட்டல்ல வேலைபாத்தாரு

இவனும் டிகிரிவரை கஸ்ட்டப்பட்டு படிச்சு நல்லாவே முடிச்சிருந்தான். வேலைக்கி முயற்ச்சிபண்ணிக்கிட்டுஇருந்தான் அவரும் பொறுமையாப்பாரு அவசரமில்ல நல்ல வேலையா இருக்கணும்.னு சொல்லுவாரு.

வீட்டுல வேலபாக்குற எடத்துல அவருக்கு ரொம்ப மரியாத இருக்குறதாச்சொல்வாரு. அவரைக்கேக்காம அவங்க மொதலாளி எந்த வேலையும் செய்யமாட்டாருன்னு சொல்லுவாரு. அதுனால அங்க இவருக்குத்தனி மரியாதன்னு மீசைய முறுக்கிக்கிவாரு.....

பொதுவா இந்தப்பருவத்துலதான் பசங்களுக்கு நண்பர்கள் கூட்டம் சேரும் அதுல நல்லவிதமும் இருக்கும். போக்கிரிகளும் இருப்பாங்க.

கொஞ்சம் வசதியுள்ள பசங்க செட்டு சேந்து சுத்துவாங்க. மத்தவங்களுக்கா செலவு பண்ணத்தயங்க மாட்டாங்க . இவன் நேரம் அதுமாதிரி செட்டுல சேந்துட்டான்

அவங்க வேலை சம்பந்தமா ஒதவியும் செய்வாங்க. ஆனா கூடயே வைச்சிக்குவாங்க நல்லா செலவும் பிரண்டுகளுக்காகப்பண்ணுவாங்க

இவனையும் அப்புடித்தான் வைச்சிருந்தாக நல்ல சாப்பாடு செலநேரங்கள்ல சரக்குன்னு வாங்கிக்குடுப்பாங்க. இவன் போகாட்டினாலும் போன் பண்ணிக்கூப்புடுவாங்க. இவன் போகலைன்னா சலிச்சிக்குவாங்க என்ன மச்சி சொதப்பிட்டயே நாங்க நீ வரலன்னா எவ்வளவு ஃபீல் பண்ணுனோம்ன்னு தெரியுமான்னு சொல்லுவாங்க இவனும் சாரி மச்சின்னு சொல்லுவான்

இப்புடித்தான் அவங்ககூட இருந்தான் வேலைக்கி இண்டெர்வியூன்னா அவங்களே வீட்டுல வந்து கூட்டிட்டுபோய் விடுவாங்க. வேலை கிடைக்காதபோது லீவிட் மச்சின்னு ஆறுதலும் சொல்லுவாங்க

அப்ப இவனோட பெர்த்டே வந்துச்சு. அத அவங்க கிராண்டாக் கொண்டாடு வோம்ன்னு சொன்னாங்க. அப்ப இவன் சொன்னான் அவ்வளவு வசதி இல்ல. வேணாமுன்னான். அப்ப அவங்க சொன்னாங்க நாங்க செலவு பண்ணப்போறோம் உனக்கு என்ன பிரச்சனை நீ வந்தாபோதுமுன்னு சொன்னாங்க தீர்மானமா

அப்ப இவனுக்கு நாம குறைஞ்ச அளவாவது செலவு பண்ணனும்ன்னு தோணிச்சி. இவனோட அப்பாகிட்ட மொத மொறையா பொய்சொல்லிக்காசு கேட்டான் இது மாதிரி வேலைக்கி அப்ளை பண்ணனும் 2000 ரூவா வேணுமின்னு கேட்டான். அவனுக்கே ஒரு மாதிரியா இருந்துச்சு. மொதலும் கடைசியும்ன்னு சமாதானம் செஞ்சிக்கிட்டான். அவரு மறுநாள் தாறேன்னு சொன்னாரு. ஆனா அவரால குடுக்க முடியல. ரெண்டுநாளு பொறுத்துக்கச்சொன்னாரு. அவங்க மொதலாளி வெளியூர் போயிருக்குறதாகவும் வந்தவன்ன தாறேன்னு சொன்னதாகவும் சொன்னாரு
பெர்த்டே நெருங்கீட்டு இருந்துச்சு. இவனும் அப்பாகிட்ட நச்சரிச்சிக்கிட்டே இருந்தான் அன்னிக்கி 

ஒருவழியாக்கொண்டாந்து குடுத்தாரு. இவனும் வாங்கிட்டுப்போய் பார்ட்டில இவன் சார்புல செலவுபண்ணான் அவங்க வேணாமுன்னு சொல்லியும் இவன் கேக்கல அன்னிக்கிப்பார்ட்டி முடிஞ்சது இவனைக்கொண்டாந்து வீட்டுல விடவந்தான் அன்னிக்கி லேட்டானதால இவங்க அப்பா வீட்டுல இருந்தாரு அவரை ப்பாத்த அவன் சொன்னான் இவரை எங்கேயோ பாத்துருக்கேன்னு.இவன் ஓட்டல் பேரு சொன்னான். இவன் அங்க எல்லாம் போனதே இல்ல.

அன்னிக்கிச்சாயங்காலம் அவன் திரும்ப வந்தான்.அவனைக்கூப்புட்டான் கூப்புட்டு நேத்துச்செலவுபண்ண காசைக்குடுத்தான் ஏன்னு கேட்டதுக்கு என்கூட வான்னு கூட்டிட்டுப்போனான் அது அவஙக் அப்பா வேலை செய்யிற ஓட்டல்

அங்க அவன் பாத்தகாட்சி அவனை உளுக்கிடுச்சு. ஏன்னா அவங்க அப்பா அந்த ஓட்ல்ல பார்ல டேபில் கீளீனிங் பண்ணிட்டு இருந்தாரு. மங்குன வெளிச்சம் ஒரு ஓரமா ஒக்கந்து பாத்தாங்க. அங்க குடிக்கிவங்க இவரை கேவலமா நடத்திட்டு இருந்தாங்க

யோவ் லூசு ஒழுங்காக்கிளீன் பண்ணு ஒன்னையெலாம் எதுக்கு வேலைக்கி வைச்சிருக்காங்கன்னு தெரியலன்னு சொல்லி திட்டிட்டு இருந்தாங்க விசயம் என்னான்னா கிளீன் பண்ணும்போது ஒருத்தர்மேல லேசா சிந்திடுச்சு அதுக்குத்தான்சரமேனிக்கித்திட்டிட்டு இருந்தானுக. யோவ் உன் மொதலாளியக்கூப்புடுன்னு கத்திட்டு இருந்தாக அப்ப அவரும்சத்தம் கேட்டு வந்தாரு, வந்தவன்ன பாத்துட்டு அவங்களை விட அசிங்கமாத்திட்டுனாரு

ஒன்னைய வேலைக்கி வைச்சிருக்குறதே தப்பு தண்டம்யா நீ .போனாப்போகுதுன்னு வைச்சிருக்கேன். ஒழுங்கா இருக்குறதுன்னா இரு இல்ல நாளையில இருந்து வேலைக்கிவராதன்னு கத்துனாரு

இவனோட அப்பா சாரிசார். இனிமே இப்புடிநடக்காதுன்னு சொன்னாரு.அப்ப அவனுக உச்சத்துல போய் அவரை காலைத்தொட்டு மன்னிப்பு கேக்கச்சொல்லுங்கன்னாக. மொதலாளி இவரைபாத்தார். இவரு தயக்கமே இல்லாம அதை செஞ்சி மன்னிச்சிக்கோங்கன்னாரு. அவனுக அத்தோட விட்டானுக.

இதைப்பாத்துக்குட்டு இருந்த இவனுக்கு அழுகையா வந்துச்சு. அடக்கமுடியல அப்பா இவ்வளவு கஸ்ட்டபட்டா வேலை பாக்குறாருன்னு ஃபீல் பன்னான் அவனால அழுகைய அடக்கமுடியல பிரண்டோட வெளிய வந்துட்டான் வார வழிலஒரு எடத்துல எறங்கிட்டு தனியாப்போய் அழுதான். அப்பா எவ்வளவு வலிகளை அவமானங்களை தாங்கிக்கிட்டு அத வெளியகாமிச்சிக்காம இருக்காருன்னு நெனச்சப்ப அழுக அழுகையா வந்துச்சு

ஒருவழியா வீட்டுக்குப்போனான் . அப்ப அவங்க அப்பா வந்துருந்தாரு. அம்மா கிட்ட சொல்லிட்டு இருந்தாரு. இன்னிக்கி ஒரு பிரச்சனை ஒரே கலாட்டா. அவனுகளை மொதலாளி அடிச்சித்தொறத்தசொன்னாரு

நான் விட்ட மெரட்டல்ல அவனுக பூனை மாதிரி ஓடிட்டானுக.சொல்லிச்சிரிச்சிட்டு இருந்தாரு.இவனுக்குபாத்துட்டு அழுக பொத்துக்கிட்டு வந்துருச்சு. சமாளிச்சித்தொடச்சிட்டு மூஞ்சியக்கழுவிட்டு அவருகிட்டபோனான் அப்பா வேலை கெடைக்கிறவரைக்கும் நான் உங்கவேலைக்கிப்போறேன் நீங்க போகவேணாம்பான்னான். அதுக்கு அவரு சொன்னாரு. ஒனக்கு ஒண்ணும் தெரியாதுடா நீ வேற நல்ல வேலையாப்பாரு. ஒனக்கு அந்தவேலை வேணாம். அங்க எனக்கு இருக்குற மரியாதைக்கு நான் போகலைன்னா மொதலாளி சண்டையே போட்டுருவாரு.ன்னு சொல்லி மீசைய முறுக்கிட்டுச்சிரிக்கும் போது அவரு கண்ணு ஓரத்துல ஒரு சின்ன நீர்த்துளி வந்ததப்பாத்தவன்ன இவனால அழுகையக்கட்டுப்படுத்த முடியல

ஆமாஇந்த நாடகத்துல அப்பா ஹீரோதான்னு....பிச்சி ஒதறுராருன்னு நெனச்சப்ப......அப்பா நீ கிரேட்டுன்னு கும்புடத்தோணுச்சு.......

(அனைத்து தியாகத்தந்தைகளுக்கு அர்ப்பணம்)

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்