பேயோட்டம் - சிறுகதை
அந்த ஊருல அப்ப அப்ப பொம்பளைப்புள்ளைகளுக்கு பேய் புடிக்கிறதாசொல்லுவாங்க. யாராவது அல்ப ஆயிசுல தூக்குபோட்டுக்கிட்டோ இல்லை துர்மரணம் ஆனவுகளோ பேயாவந்து பொம்பளைப்புள்ளைகளை புடிச்சி ஆட்டுவிச்சு அப்புறம் கோடாங்கி அடிச்சி பேயோட்டி பாத்துருக்கா. செலநேரம் ஊர் சாமியாடிக விபூதி குடுத்தா சரியாகிடும். ஒருதடவ ஒருபொண்ணுக்கு பேய் புடிச்சி அது புரியாதபாசையெல்லாம் பேசுச்சு. ரோட்டுல அடிபட்டுச்செத்த ஒருத்தரோட ஆவின்னு பேசிக்கிட்டாக. இது கிராமத்துல அடிக்கடி நடக்குறதுதான்
அந்தௌஊரு கிராமமும் இல்ல ரெண்டுங்கெட்டான். அங்க அவ்வளவா யாருக்கும் பேய் புடிக்கிறதில்ல. அதுவும் போக அங்க சாமியாடிகளுக்கும் அவ்வளவா வேலையில்ல.
அந்த ஊருல ஒரு பொம்பளைக்கி பேய் புடிச்சிட்டதா பேசிக்கிட்டாக. கையில கெடைக்கிறத தூக்கி புருசன் புள்ளைகமேல அடிக்கிறதும் தலைய விரிச்சிபோட்டுக்கிட்டு நாக்கை துறுத்திக்கிட்டு கண்ண உருட்டி முளிச்சி பாக்கவே பயங்கரமா இருந்துச்சு. ரொம்ப உக்கிரமா இருக்குறதா பேசிக்கிட்டாக
உள்ளூர் கோயில்ல துண்ணூறு வாங்கிக்குடுத்தாக. சாமியாடி வந்து துண்ணூறு பூசிவிட்டாரு. ஒண்ணும் பாச்சா பலிக்க்கல. ஒருத்தவுக சொன்னாங்கன்னு கோரிப்பாளையம் பள்ளிவாசலுக்குப்பக்கத்துல கூப்புட்டுபோய் மந்திரிச்சி தாயத்துக்கட்டியெல்லாம் பாத்தாக்க ஒண்ணுக்கும் மட்டுப்படல
அப்ப ஒரு பூசாரி சொன்னாரு. இது கடுமையான பேய் இத வெரட்டனும்ன்னா பெரிய அளவில ஏதாவது செய்யனும்ன்னு சொன்னாரு. அவரே ஒரு வழியும் சொன்னாரு. நம்ம சொந்தக்காரவுகள்ள முனி இருளப்பசாமி ராக்காயி கருப்பு முத்தையா சாமி ஆடுறவுக எல்லாத்தையும் கூப்புட்டு சாமி எறக்கி ஒன்னா சேந்து இந்தப்பேய ஓட்டலாமுன்னு சொன்னாரு
அதுக்கான நாள் குறிச்சி எல்லாருக்கும் சொல்லி அனுப்புனாக அன்னிக்கி ராத்திரி மேளக்காரவுக கோடாங்கி சாமியாடிக பூசாரிக எல்லாம் வீட்டுக்கு முன்னாடி ஒரு பெரிய வெளி இருக்கும் அதுல கூடுனாக. கருப்பையா இருளப்ப சாமியாடி அவரும் வந்துருந்தாரு. சாம்பிராணி பொகை தெருவையே கலக்குச்சு தெருப்பூராம் சாம்பிராணிப்பொகையும் சூடன் எரியிற வாசமும் மூச்சுமுட்டுச்சு
உறுமியும் செண்டையும் நையாண்டிமேளமும் அதிர ஆரம்பிச்சிடுச்சு சாம்பிராணிப்பொகை வேற .சும்மா நிக்கிறவுகளுக்கே ஒரு மாதிரிதான் இருந்துச்சு. மேளம் திண்ணு திண்ணு டொய்வுன்ன்னு அதிர அதிர எல்லாருமே ஒரு இறுக்கமான மொகமாயிட்டாக. என்னா நடக்கப்போகுதுன்னு திகில் பக்தி கலந்த மொகத்தோட ஆர்வமா நின்னாக. சின்னப்புள்ளைகளை கர்பிணிபொண்ணுகளை வீட்டுக்குள்ள போய் இருக்கச்சொன்னாக. மேளம் அதிர பூசாரி சாமிஏறக்க ஒவ்வொரு சாமியா எறங்குச்சு. எல்லாச்சமியுமே உக்கிரமமா எறங்குச்சு, எறங்கி துண்ணூற்ற அள்ளி மூஞ்சில பூசிக்கிச்சுயிற சூடத்த அள்ளி வாயில போட்டுக்குச்சு .ஆனா அந்த அம்மா எதுவும் நடக்காத மாதிரி
ஒக்கந்துருந்துச்சு. சாமியாடிகளூக்கு சாமி வந்து ஒவ்வொருத்தார போய் அந்தம்மாகைய புடிச்சி தலைமுடியப்புடிச்சி மெரட்டுனாக. யாரு நீ எங்கவந்து ஆட்டம் போட்டுக்குகிட்டு இருக்க, ஆணியடிச்சி அசைய விடாமப்பண்ணிருவேன் நு என்னான்னமோ சொன்னாக. அது யாருக்கும் பயப்படல அதுபாட்டுக்கு தலைய ஆட்டிக்கிட்டு இருந்துச்சு. எல்லாச்சாமியாடிகளும் அந்தம்மாவச்சுத்தி நின்னு மெரட்டுனுனாக. அதுல ரொம்ப உக்கிரமா ஆடுறவரு கருப்பையா அவரும் உக்கிரமா ஓடிப்போ மலையான் அரமணையில ஆட்டம்போட்டே மண்ணோட மரத்தோட பொதைச்சிடுவேன் ஓடிப்போ பிள்ளைய விட்டுருன்னு சொல்லி ஆடிவந்து துண்ணூர எடுத்து அந்தம்மா தலயில அடிச்சாரு. அத்தோட அது மயங்கிடுச்சு. அப்புறம் தண்ணியத்தெளிச்சி எழுப்புனாக. ஆனா அது ஒண்னும் பேசலை
அப்ப பூசாரி சொன்னாரு அது அடங்கிடுச்சு இனிமே தொந்தரவு பண்ணாதுன்னு சொன்னாரு. எல்லாரும் கலைஞ்சி போனாங்க அந்தம்மாவ வீட்டுக்குக்கூப்புட்டுப்போனாக ஆனா அது அதுக்கப்புறம் பேசவே இல்ல. உக்கிரம் இல்ல. படுத்த படுக்கையாயிடுச்சு சாப்புட மாட்டீங்குது ஒண்ணும் சரியாகல
அங்க ஒருத்தர் ஏற்கனவே மனோத்தத்துவ டாக்டர் கிட்ட வைத்தியம் பாத்தவர். அவரு சொன்னாரு அந்தம்மாவா அங்க கூட்டிட்டுப்போய் காமிப்போம்ன்னு. அந்தம்மா புருசன் ஒத்துக்கிட்டு கூட்டிட்டுபோனாக. அங்க அவரு கவுன்சிலிங் பண்ணாரு பண்ணிட்டு மாத்திரை எழுதிக்குடுத்தாரு. அம்புட்டும் தூக்க மாத்திரை மாதிரி குடுக்கும்போது சொன்னாரு நான் சொல்ற மாதிரி குடுங்க அதுகண்ணுல படுற மாதிரி வைக்காதீங்க இதை சாப்புட்டு நல்லா அந்தம்மா தூங்குவாங்க அவங்க மூளை டிஸ்ட்டர்ப் ஆயிருக்கு சரியாக கொஞ்சநாளாகும் . ஆனா சரியாகிடும் வேற ஏதாவதுபிரச்சனைன்னா வாங்கன்னு சொல்லி அனுப்பிச்சாரு
அதுக்கபுறம் அந்தம்மா ரெண்டு வாரம் நல்லாத்தூங்கி எந்திரிச்சி கொஞ்சம் கொஞ்சமா சரியாச்சு அப்ப அவர் சொன்னாரு பேய் பிசாசெல்லம் கெடையாது. மூளை ஏதாவது அதிர்ச்சியான சம்பவம் அல்லது ஓவரான கவலை இல்ல ஆக்சிடெண்ட் சந்திக்கும்போது இப்புடி டிஸ்ட்டர்ப் ஆயிடும். அதுக்கு ட்ரீட்மெண்ட் இருக்கு. பேயோட்டுறவேலையெல்லாம் சும்மா வேடிக்கைதான்னு சொன்னாரு
அவரு கொஞ்சநாள் கருப்புசட்டை போட்டுக்குட்டு இருந்தவரு துண்ணூறு பூசமாட்டாரு. அதுனால அவரு அப்படித்தான் பேசுவாருன்னு சொல்லிடாக. ஆனாலும் நம்புறவுக இருக்கத்தான் செய்யிறாக.....
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்