காமத்துப்பாலை விவரிக்கும் குறுங்கவிதை!
புத்தகம்: ரதி ரகசியம்
எழுத்தாளர்:
சி. சரவணகார்த்திகேயன்
இந்த முயற்சியின் ஆதி வடிவம் 2003ஆம் ஆண்டில் எழுத்தாளர் சரவணன் கல்லூரி படித்த காலத்தில்
"இது காதலர்களுக்கு மட்டும்"
என்ற பெயரில் அன்றைய அவரது காதலியும் இன்றைய அவரது மனைவியுமான பார்வதி யமுனாவுக்கு பிறந்தநாள் பரிசாக எழுதியிருக்கிறார்.

கையெழுத்துப் பிரதியில் அழகிய கையடக்க நூலாக செய்திருக்கிறார். இன்னமும் அதை பத்திரம் செய்து வைத்திருக்கிறாராம் .
மனைவிக்கு எப்படியோ அவர் வரையில் இத்தனை ஆண்டுகளில் அவர் அளித்த பரிசுகளில் ஆகச் சிறந்தது அதுவே என்கிறார் எழுத்தாளர்.
வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் காமத்துப்பால் எப்போதுமே கொஞ்சம் வசீகரமானது தான்.
பெயர் காமத்துப்பால் எனினும் உண்மையில் அவற்றில் பெரும்பாலானவை காதலை மட்டுமே பேசுபவை.
காமத்துப்பாலை ஒவ்வொரு குறளாக எடுத்துக்கொண்டு குறுங்கவிதை ஆக்கி பார்க்க முயன்றிருக்கிறார்.
மொத்தம் 250 குறட்பாக்கள்-
250 குறுங்கவிகள்
முதலில் இந்த கவிதைத் தொகுப்பிற்கு காதல் அணுக்கள் என்ற தலைப்பை வைத்திருக்கிறார்.இந்த கவிதைத் தொகுப்பை புத்தகம் செய்ய தீர்மானித்த போது காலம் உருண்டோடி தொடருக்கு வைத்த தலைப்பு சற்று பலவீனமாக தோன்றவே புதியதோர் அடையாளத்தை வைப்பதற்காக ரதி ரகசியம் என்ற பெயரை வைத்திருக்கிறார் .
காமத்துப்பால் குறட்பாக்கள் பெரும்பாலும் பெண்ணின் காதல் உணர்வுகளையே சொல்பவை.
அவளது காதல் மனம், அதன் பைத்தியக்காரன் நிலை ,அதில் ஒளிந்துள்ள ரகசியங்கள் .
ஆக, காதலின் பெண்பால் கடவுளான ரதிதேவி என்ற பெயரை தேர்வு செய்தேன் என்கிறார்.
பிற்பாடு தேடியதில் கொக்கோகர் 12ஆம் நூற்றாண்டில் காமம் பற்றி இதே தலைப்பில் நூல் இயற்றியுள்ளார் என்கிற அர்ர்ரிரிரியயயய தகவலை நம்மோடு பகிர்றார்.
வாத்சாயனரின் காமசூத்ரா போல.(