அம்மா மனசு - சிறுகதை

amma-manasu-short-story
amma manasu short story

ரெண்டுநாளா செல்விக்கு முடியல உடம்பெல்லாம்
வீங்கிக்கெடக்கு என்னான்னு தெரியல
உள்ளூரு டாக்ட்டருக்கிட்ட கூட்டிட்டுப்போனாக
அவருபாத்துட்டு "ஒண்ணுக்கு ரெண்டுக்கெல்லாம்
ஒழுங்காபோகுதா?" ன்னு கேட்டாரு செல்விசொல்லிச்சு
"இல்லஒண்ணுக்கு வரல மூச்சுவிடவும் சிரமமாருக்கு"ன்னு

அவருசொன்னாரு "நீங்க பெரியாஸ்பத்திரிக்குகொண்டுபோங்க
இங்கெல்லாம் பாத்தா சரியாகாது கொஞ்சம் சிக்கலான
பிரச்சனைதான்"னு சொன்னாரு இருந்த நகை நட்டெல்லாம்
அடகுவைச்சி அக்கம்பக்கத்துல கடன வாங்கிபணம்
சேத்து எடுத்துக்கிட்டு பக்கத்துல இருக்குற டவுன்ல
இருக்குற கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுபோனாக
அங்க சின்ன டாக்ட்டரு பாத்துட்டு "பெரிய டாக்ட்டரு
வரட்டும் அவரும் பாத்துடட்டும்"ன்னாரு

"என்னாச்சோ புள்ளைக்கி'ன்னு அம்மா அழுக ஆரம்பிச்சிடுச்சு
அப்பா கந்தசாமி தேத்துனாரு "சாமியக்கும்புட்டுக்க
நேந்துக்க்க புள்ளையக்காப்பாத்த குலதெய்வத்துக்கிட்ட"ன்னாரு
பெரியடாக்ட்டரு வந்துட்டாரு புள்ளையத் தனியாகூப்புட்டுப்போய்
டெஸ்ட்டெல்லாம் எடுத்தாக "குழந்தைய ஆசுபத்திரில சேத்துருங்க
சாயங்காலம் டெஸ்ட் ரிப்போட்டு வந்துரட்டும் அப்புறம்பாக்கலாம்"னாரு
செல்வியசேத்துட்டு வெளிய போய ஆசுபத்திரி வாசல்ல இருந்த
கோயில்ல போய் சாமிகும்புட்டுட்டு வந்தாக

சாயங்காலமா பெரிய டாக்ட்டரு வந்தாரு "செல்வியோட
அப்பா,அம்மாவை டாக்ட்டரு கூப்புடுறாரு"ன்னு
ஆசுபத்திரி ஆயாவந்துசொல்லிச்சு உள்ள போனாக
ஒக்காரச்சொன்னாருஅவர் சொன்னாரு" உங்க மகள்
சின்னவயசுல சாப்பிடக்கூடாத மருந்தச்சாப்புட்டதுனால
ரெண்டுகிட்னியும் போச்சு இப்போதைக்கி டயாலிசிஸ் பண்ணலாம்
ஆனா ரொம்பநாளு தாங்காது மனசத்தேத்திக்க"ங்கன்னாரு
ரெண்டுபேரும் அழுதாக "வேறவழியே இல்லையா அய்யா?"ன்னு
"இருக்கு கிட்னிய மாத்தி ஆப்பரேசன் பண்ணனும்

அதுக்கு காத்திருக்கனும் இல்லேனா யாராவது குடுக்கனும்
ஒருமனுசனுக்கு ஒருகிட்னி போதும் ஆனா கடவுளு ரெண்டுகொடுத்துருக்காரு ஒன்ன தானம் பண்ணலாம்"ன்னாரு

அப்பாசொன்னாரு "பேசிட்டுச்சொல்றோம்"யான்னு
அம்மா யோசிக்காமச்சொன்னாக "என்னுத எடுத்துக்கங்க
ரெண்டையும் கூடதாறேன் நான் இருந்து என்ன பண்ணப்போறேன்"னு
டாக்ட்டரு சொன்னாரு "அப்புடியெல்லாம் தேவையில்ல
ஒண்ணுபோதும் ஆனா பொருந்தனும் டெஸ்டு எடுக்கனும்ன்"னாரு
"எடுங்கையா எப்பவரட்டும் இப்பவே நாங்க தயார்தான்"ன்னாங்க
"நாளைக்கிவாங்க பாக்கலாம்"ன்னாரு சரின்னுசொல்லிட்டு
செல்வியபாக்கபோனாங்க செல்வி அப்பத்தான் கண்ணு

முழிச்சிருந்தா,,"என்னாம்மா டாக்ட்டரு சொன்னாரு?
நான் செத்துடுவேனா? சொல்லும்மா சொல்லும்மா"ன்னா
அழுகைய அடக்கமுடியல அம்மாவாலயும் அப்பாவாலயும்
அம்மா சொன்னாக "கவலைப்படாத எங்க உசுரக்கொடுத்தாவது
காப்பாத்திடுவோம்னு" அம்மா சொல்லிச்சி அழுதுகிட்டே
செல்விசொன்னா "என்னா சொன்னாரு டாக்ட்டரு
உங்க கிட்னிய எனக்கு வைக்கிறேன்னு சொன்னாரா

வேணாம்மா நீங்களே ரொம்பக்கஸ்டப்படுவீக
உங்க உசுறுக்கும் ஆபத்து நான் சின்னப்புள்ளதானே
கொஞ்சநாளு இப்புடியே இருந்துட்டுப்போயிடுறேன்
நீங்க உங்க உடம்பக்கெடுத்துக்காதீங்க"ன்னு அழுதுகிட்டேசொன்னா
"அப்புடிச்சொல்லாதம்மா நீதான் என்னோட உசுரு
உன்னக்காப்பாத்தாம விடமாட்டோம் கவலைப்படாத"ன்னாங்க
மறுநாள் டெஸ்ட்டுல அம்மா கிட்னி சேரும்ன்னு சொல்லிட்டாக

ஒருவாரத்துல அம்மாவோட ஒருகிட்னி மகளுக்கு மாறிடுச்சு
செல்வி அம்மாவைக்கட்டிப்புடிச்சி கண்ணீர்விட்டா
அம்மா அம்மான்னு அழுதா பேசவரல அவளுக்கு
அம்மாவும்கண்ணீர்விட்டா "என் செல்லத்துக்காக
உசுறக்கூடத்தருவேன் ஏன்னா நீ என் ரத்தம்"னா கண்ணீரோட
அப்பா அமைதியா கண்ணத்தொடச்சிக்கிட்டார்
அம்மாவைப்பெருமையோட பாத்தார்வழியும் கண்ணீரோட.....

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்