மனமாற்றம் - சிறுகதை
வாசலத்தான் எட்டி எட்டிப்பாத்துக்கிட்டுந்தாரு பொன்னுச்சாமி... வீட்டுல அவருமட்டும் தனி தான் பொண்டாட்டி யெல்லாம் ரொம்ப நாளைக்கி முன்னாடிநடந்த சண்டையில சண்ட முத்தி கோவிச்சிக் கிட்டு அப்பன் வீடுபோனவ போனவதான்... திரும்ப வரல. இவரும் போய்க்கூப்புடல. அம்புட்டு வைராக்கியம் அவளும் திரும்பி வரல. அவளுக்கும் வைராக்கியம் அங்கேயே போய்சேந்துட்டா
அவபோனதுக்கூட இவருபோகல . தொட்டுத்தாலிகட்டின பொண்டாட்டி செத்துப்போனதுக்குக்குட போகாம எப்புடி ஒரு மனுசன் இருப்பான் இப்புடியும் ஒருமனுசன் இருப்பானான்னு அவன் மனுச ஜென்மம் தானான்னு ஊரு சனங்க பேசிக் கிட்டாக .இருக்குற போதுதான் போய்ப்பாக்கல போனவளக்கூப்புடவும் இல்ல
போனவ போனவதான்னு நெஞ்சில இரக்கம்மில்லாமஇருந்துட்டாரு. ஆராவது ஏதோகோவத்துல போனா அதுக்காக அப்புடியே விட்டுறதான்னு சொன்னவகளுக்கு போயா புண்ணாக்கு மனுசனுக்கு கவுரவம் தான் முக்கியம். அது இல்லாம மனுசன் இருக்குறதுல எந்தபிரயோசனுமுமில்ல. செத்துடலாம்யாம்பாரு அதுக்காக
வேறகலியாணம் பண்ணச் சொன்னவு களையும் திட்டுவாரு. இன்னொருதடவ எவனாவது அந்தத்தப்பத் திரும்பச் செய்வானாம்பாரு. தனியாத்தான் கெடந்து அல்லாடிக்கிட்டு இருந்தாரு.அதுல ஆயிரம் செரமம். தானேசமைச்சி தானே சாப்புட்டு தானே படுத்து நரகவாழ்க்கைத்தான் அது இருந்தாலும்
அதுக்குப்பழக்கபடுத்திகிட்டாரு ஊருல அவர ஒண்டிகொரங்குன்னு செலபேரு கிண்டல் பண்ணுறதையும் கண்டும் காணாமல் போவாரு....
இருவது வருசத்துக்கு முன்னாடி நடந்தது அது
அவரோட மக லதா படிக்கபோன எடத்துல காதல் வசப்பட்டுட்டா . அவன் சாதி வேற இவரோட நெனப்புல அது கீழான சாதி அதுனால கோவம் தலைக்கேறிப்போச்சு
மகளைப்பாதில படிப்ப நிறுத்திக் கூட்டி யாந்துட்டாரு ஒடனே தங்கச்சிமகனுக்கு ஒடனடியா கலியாணமும் ஏற்பாடு பண்ணிப்புட்டாரு. மக அழுதுபொலம்புனா எனக்கு இதுல இஸ்டமில்ல ந்னு ஆனா இவரு காதுலயே போட்டுக்கல. ஆளக்காவல் வைச்சிட்டு கலியாண வேலையப்பாத்தாரு,
அவரோட தங்கச்சி மகன் சரியான பொறம்ப்ப்போக்கு. நெறயாச்சொத்து
அனுபவிக்கவே பொறந்தவன்ன்னு நெனச்சிக்கிட்டான்போல. காச எப்புடி யெல் லாம் கரைக்கனுமோ அப்புடிக் கரைச் சான் கூட ஒரு கூட்டம் சீட்டு குடி கூத்தி யான்னு. அவனுக்குத்தான் கட்டிவைக்க ஏற்பாடு அவசரக்கலியாணம் அதுநால சுருக்கமா ஏற்பாடு . பொண்டாட்டிகாரிக்கும் புடிக்கல வேறசாதிவேணாம் ஆனா நம்ம சாதில வேற நல்ல மாப்புள்ளயாவது பாருங்கன்னா
அதுக்கு இவரு உம்மக அந்தப்பயலோட ஊரு சுத்துனது எல்லாருக்கும் தெரிஞ்சிபோச்சி
எவன் வந்து கட்டுவான் ஒம்மகளை
இவனக் கைல கால்ல விழுந்து நானே சம்மதிக்க வைச்சேன்னாரு. அப்புடிச் செய்யிறதுக்குப்பதிலா இவள கெணத்துல புடிச்சித்தள்ளுயா புண்ணியமாப் போகும்ன்னா
ஓம்வாயப்பொத்திக்கிட்டு சோலியப் பாருன்னாரு. அவசரமாக்கலியாணமும் நடந்துமுடிஞ்சிபோச்சு. மகபோன மறுநாளே திரும்பிவந்தா. அவன்கூட வாழமாட்டேன்
அவன் தண்ணியப் போட்டுட்டு வந்து அடிக்கிறான் கேக்காதகேள்வியெல்லாம் கேக்குறான்னா. இவரும் போயிப் பேசிப் பாத்தாரு. அவன்சொன்னான் இந்தாயா நீ கெஞ்சிக் கேட்டதால கலியாணம் பண்ணிக் கிட்டேன் அம்புட்டுத்தான் மத்ததுல நீ தலையிடா தன்னான். இவருகட்டாயப்படுத்தி
கொண்டுபோயி விட்டாரு திரும்ப வீட்டுக்கே வந்தா. அவன் கூத்தியாளக்கூட்டியாந்து வீட்டுலயே குடித்தனம் நடத்துறான் இனிமே அங்க போகமுடியாதுன்னா. இவருபோயி திரும்ப அவமானப்பட்டு வந்தாரு. இதுக்கு நடுவுல மககாரிய ஒருநா காணாம். அம்மாகாரி எனக்கு எதுவும் தெரியாதுன்னு சாதிச்சா.
அப்புறமாத்தெரிஞ்சது அவ அவளோட ஆளோட ஓடிப்போயிட்டான்னு. இதுக்கு ஏற்பாடு பண்ணது ஆத்தாகாரின்னு . அன்னிக்கி பொண்டாட்டிய போட்டு வெளுத்துப்புட்டாரு
அவ அடிதாங்கமுடியல. கோவத்துல ஒரு வார்த்தை சொன்னா. வேணும்னு இது ஓம் மகளே இல்ல. வேறாளுக்குப்பொறந்ததுன்னு.
வெளியதள்ளிக் கதவச்சாத்துனாரு போனவ போனவதான். அவசெத்துப்போயி ஒருகொஞ்ச நாளுக் கழிச்சி அவபொட்டிய தொறந்து பாத்தாருஅது அவளோட பொட்டி யாரையும் தொடவிடமாட்டா. பூட்டுப்போட்டுருப்பா இப்ப பொட்டியே துருப்பிடிச்சிப்போச்சி தட்டுனவன்ன தொறந்துக்கிச்சி. அதுல மேலாப்புல ஒரு பேப்பர் இருந்துச்சு
அதுல அவ எழுதிவைச்சிருந்தா. என்னிக் காவது நீ இதப்படிப்பன்னு தெரியும். அன்னிக்கி நான் வேணும்ன்னு பொய் சொல்லிட்டேன் உன்னோட திமிற அடக்க . மத்தபடி அவ நம்ம மகதான்நான் அப்புடி சொல்லன்னா நீ தேடிப்போயி அவளை வெட்டிருப்ப உன் மக இல்லன்றதால வெறுத்துப் போயி விட்டுட்ட என்ன மன்னிச்சுடுங்கன்னுஅன்னிக்கி அழுது பொலம்புனாரு.
போனவாரம் வீட்டுக்குகடுதாசி வந்துச்சு
மககாரிகிட்ட இருந்து. ஒங்க பேத்திக் கிக்கலியாணம் வைச்சிருக்கு பத்திரிக்க வைக்க அவளே தனியா வாறா. வேணும்னா வாங்க. புடிக்கலன்னா விட்டுருங்க ஆனா பேத்திமனசநோகடிச்சிறாதீகன்னு
அவருக்குள்ள என்னமோ நடந்துச்சு சாமி இப்புட்டு நாளா கும்புடாதவரு பேத்தி நல்லாருக்கனும்னு சாமிகிட்ட வேண்டி காசு முடிஞ்சிபோட்டாரு. பேத்திகாரி வந்தா அவரோ மூஞ்சி அப்புடியே இருந்துச்சு. பொண்டாட்டி நெனப்பு வர கண்ணீர் வழிஞ்சிச்சி.எவ்வளவு பெரிய மனுசி அவன்னு.மகளுக்காக தன்னையே அழிச்சுகிட்டவ
வாம்மா என்னோட செல்லபேத்தியேன்னுகண்ணீர்வழிய க் கூப்புட்டாரு ......அவ தயக்கத்தோட உள்ளவந்தா அவசொன்னா
தாத்தாஎன்னயத்தெரியுதா நாந்தான் உங்க பேத்தி பேரு லட்சுமின்னா. அதைக்கேட்டதும் அவர் உசிறு ஆடிப்போயிடுச்சு. ஏன்னா லட்சுமி அவரோட சம்சாரத்தோடபேரு. பேத்திக்கும் அவளோட மொகஜாடைதான். அவர் என்ன மன்னிச்சிரும்மான்னாரு அதுக்கு அவ கேட்டாஎதுக்கு மன்னிப்புன்னா. இவர் சொன்னாரு எல்லாத்துக்கும்தான்...னாரு கண்ணுல தண்ணீர் ஊத்த அவர் தொண்டை துக்கத்துல அடைச்சி பேசமுடியல. அவருக்கு அவர் சம்சாரம் செத்துக்குக்கூடபோகாதது அவர இப்ப உளுக்கிடுச்சு.
அப்ப திக்கித்திக்கிச்சொன்னாரு எதைச்சொல்வேன் நானு உங்க அம்மாயிய புரிஞ்சிக்காம இருந்ததையா போய் கூப்புடாம இருந்ததையா இல்ல அவசெத்ததுக்கூடபோகம இருந்ததையா இல்ல உங்க அம்மாவ பாடாப்படுத்துனதையா..... நான் ஒரு முட்டாள்னு சொல்லி கேவிக்கேவி அழுதார்
அப்ப அவரோட பேத்தி சொன்னா அது போயிடுச்சு. இனிமே வராது என் கலியாணத்துக்கு வாங்க தாத்தான்னா
அவர் சம்சார்த்தோட பொட்டியத்தொறந்து அவளோட நகையெல்லாம் எடுத்துக்கொடுத்தார் இந்தாம்மா எல்லாம் உங்க அம்மாயி நகைதான் எடுத்துக்கன்னார்
அதுக்கு அவசொன்னா அதெல்லாம் வேணாம் உங்களோட வாழ்த்தும் ஆசியும் போதும்ன்னா
அவர் கொஞ்சம்வாதாயி ந்னு உள்ளாற கூட்டீட்டுப்போய் துன்னூரு பூசிவிட்டாரு அங்க அவர் சம்சாரம் போட்டோவில மாலைபோட்டு சிரிச்சிக்கிட்டு இருந்தா... அப்ப அவர் சொன்னாரு லட்சுமி இந்தா ஒன் பேத்தி வந்துருக்கா ஆசீர்வாதம் பண்ணும்மான்னாரு
அப்ப அவரால கண்ணீர அடக்கமுடியல... பேத்தியாலயும் தான்
அ.முத்துவிஜயன்