Breaking News :

Monday, September 16
.

உணவை ஏன் வீணடிக்க வேண்டாம்?


ஜப்பானுக்கு சுற்றுலா சென்ற இரண்டு நபர்கள் ஒரு உணவகத்தில் சாப்பிட்டு முடித்து எழுந்தார்கள்.

இவர்கள் தட்டுகளில் கால் பகுதிக்கு மேல் உணவு சாப்பிடப்படாமல் அப்படியே விடப் பட்டு இருந்தது.

இருவரும் பில் தொகையை உணவு பறிமாறியவரிடம் செலுத்த முயன்றபோது, அவர்களின் பக்கத்து மேஜையில் சாப்பிட்டு கொண்டிருந்த இரு மூதாட்டிகள், உணவக உரிமையாளரிடம் இவர்களை அழைத்துச் சென்று சாப்பிடாமல் உணவை விரயம் செய்து விட்டுச் செல்வதற்கு தங்கள் அதிருப்தியையும், எதிர்ப்பையும், வருத்ததையும் தெரிவித்திருக்கிறார்கள்.

அந்த கடை உரிமையாளர், “ஏன் உணவை இப்படி விரயம் செய்தீர்கள்?” என்று மென்மையாக கேட்க,

உடனே அந்த நபர்கள், “நாங்கள் ஆர்டர் செய்ததற்கு கட்டணத்தை செலுத்திவிட்டோம், அதுபற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? அது எங்கள் உரிமை” என்று பேசியிருக்கிறார்.

அந்த வயதான மூதாட்டிகளுக்குக் கோபம் வந்து, உடனே யாருக்கோ தொலைபேசியில் பேச சில மணித்துளிகளில் சீருடையில் வந்த அதிகாரி கடுமையான குரலில், "எப்போதும் உங்கள் தேவைக்கேற்ப ஆர்டர் செய்யுங்கள். பணம் உங்களுடையதாக இருக்கலாம் ஆனால் அந்த உணவுப் பண்டங்கள் இந்த நாட்டின் தேசியச் சொத்து. உலகம் பல பற்றாக்குறைகளைக் காணும் இக்காலகட்டத்தில் இப்படி உணவுகளை விரயம் செய்வது பகுத்தறிவுக்கு முரண் அல்லவா? எனவே இனி எங்கும் இப்படிச் செய்யாதீர்கள்” என்று அறிவறுத்திவிட்டு ரூ3300 (50 Yen) பணம் அபராதம் விதித்திருக்கிறார்.

அவர்கள் இருவரும் அபராதம் செலுத்திவிட்டு, மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள்

நண்பர்களே! ஜப்பான் அதிகாரி சொன்னது, உணவை விரயம் செய்கிற அனைவருக்கும் பொருந்தும்.

“பணம் நம்முடையதாக இருக்கலாம் ஆனால் உணவு நாட்டின் சொத்து” என்ற கருத்து விதை நம் இல்லங்கள் தோறும் உள்ளங்கள் தோறும் விதைக்கப்பட வேண்டும்.

உணவு பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாக கருதப்பட வேண்டும்.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.