வாரணாசி: பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவருக்கு எதிராக தாக்கல் ஆன 55 மனுக்களில் 36 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் கமிஷன் இணையதளத்தின் படி பிரதமர் மற்றும் காங்., வேட்பாளர் அஜய்ராய் உள்பட 15 மனுக்கள் ஏற்கப்பட்டதாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஆறு பேர் மட்டுமே களத்தில் உள்ளனர்.
வரும் ஜூன் 1 ல் கடைசி கட்ட ஓட்டுப்பதிவின் போது வாரணாசியில் தேர்தல் நடக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் டிவி ஷோக்களில் மோடி, ராகுல் போல் மிமிக்கிரி செய்து பிரபலமான ஷியாம் ரங்கீலா வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதில் தேர்தல் கமிஷன் அரசியல் விளையாட்டு நடத்தியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அனைத்து ஆவணங்களும் சரியான முறையில் அளித்தும் நிராகரிப்புக்கான உரிய காரணம் இல்லை என்றும் அவர் குறைகூறியுள்ளார்.