கமல்ஹாசனை கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்
நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீகரகத்தின் கோல்டன் விசா கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.
தற்போது துபாயில் உள்ள நடிகர் கமல்ஹாசன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மற்றும் அமைச்சரவை உறுப்பினர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானை ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார்.