இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்தின் அறிவிப்பை நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஒரு வீடியோவின் மூலம் இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினி மாஸாக அமர்ந்துக்கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது.