அம்பானிக்கு இணையாக கோடிகளில் திருமணம் - துரைமுருகனுக்கு சண்முகம் கேள்வி.
கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபுக்கு 6 மணி நேரம் காலக்கெடு? - தீவிர சிகிச்சை
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் அப்போதைய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ். பாபு. இதையடுத்து நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவர் கலந்து கொண்டார். அதன்பின்னர் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் அனுமதிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் அவரது உடல்நிலை குறித்த விரிவான மருத்துவத் தகவல்கள் பொதுவெளியில் வெளியாகாமல் இருந்து வந்தன. இந்நிலையில், அவருக்குத் தொடர்ந்து தீவிர மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக, அவரது கழுத்துப் பகுதியில் மருத்துவச் சிகிச்சைக்காகக் குழாய் பொருத்தப்பட்டு, உடலில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், எக்மோ (ECMO) கருவியின் உதவியுடனும் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அடுத்த ஆறு மணி நேரம் அவரது சிகிச்சையில் முக்கியமான காலகட்டமாக இருக்கும் என்றும், அதன் பின்னர் அவரது உடல்நிலை குறித்த அடுத்தகட்டத் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.