மீனவர்கள் உயிரிழப்பு: 50 லட்சம் நிவாரணம் வழங்க அண்ணாமலை கோரிக்கை

we-the-leaders-annamalai-fishermen-s-death-claim-fund-tn-cm-vijay
மீனவர்கள் உயிரிழப்பு: 50 லட்சம் நிவாரணம் வழங்க அண்ணாமலை கோரிக்கை

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஒன்பது மீனவர்கள், முரசு புயலின் தாக்கத்தால் நடுக்கடலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, உயிரிழந்த மீனவர்களுக்கு தல 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஒன்பது மீனவர்கள், முரசு புயலின் தாக்கத்தால் நடுக்கடலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, உயிரிழந்த மீனவர்களுக்கு தல 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், மீனவர்களின் பாதுகாப்பில் புதிய அணுகுமுறையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உரிய வாழ்வாதார உத்தரவாதமும் அவசியம் என குறிப்பிட்டு, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஒன்பது மீனவர்கள், முரசு புயலின் தாக்கத்தால் நடுக்கடலில் சிக்கி உயிரிழந்த மிகுந்த வேதனையையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களது குடும்பங்கள் எதிர்கொள்ளும் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என எனது தெரிவித்துள்ளார்.

உ*யிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மீனவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு இந்தத் துயரமான நேரத்தில் அரசும் சமூகமும் உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியமாகும். இந்தச் சம்பவத்தை ஒரு இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்து என்று மட்டும் கடந்து சென்றுவிட முடியாது. ஏனெனில், இது நமது கடல்சார் பாதுகாப்பு ஏற்பாடுகள், மீனவர்களுக்கான அவசரகாலத் தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

படகுகளும் பாதுகாப்பான புயல் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட பின்னர், கடலில் இருந்த அனைத்து மீன்பிடிப் இடங்களை அடைந்துவிட்டனவா என்பதை உறுதிப்படுத்தும் கண்காணிப்பு முறை, ஆழ்கடலில் சிக்கியுள்ள மீனவர்களின் துல்லியமான இருப்பிடத்தைக் கண்டறியத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட தற்போதைய நடைமுறைகளில் உள்ள சவால்களை அடையாளம் கண்டு, நிர்வாகச் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இத்தகைய உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ஏழு லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார். மேலும், உடனடி நிவாரணமாகத் தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த உடனடி உதவி வரவேற்கத்தக்கது.

உ*யிரிழந்த ஒவ்வொரு மீனவரின் குடும்பத்திற்கும் தலா 50 இலட்சம் ரூபாய் நிவாரண உதவியைத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இதில், 25 இலட்சம் ரூபாயை உடனடி நிவாரணமாக வழங்குவதுடன், மீதமுள்ள 25 இலட்சம் ரூபாயை அந்தந்தக் குடும்பத்தினரின் பெயரில் நீண்டகால வைப்பு நிதியாகச் செலுத்த வேண்டும்.

அந்த வைப்புத் தொகையின் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய், குடும்பத்தின் அன்றாடத் தேவைகள், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு நிலையான நிதி ஆதாரமாக அமையும். மேலும், குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பாதுகாக்கும் வகையில், தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாட்டையும் உருவாக்க வேண்டும். உயிரிழந்த மீனவர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான கல்விச் செலவுகளுக்கு அரசு சிறப்பு உதவித்திட்டம் ஒன்றையும் அறிவிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். See less