Breaking News :

Sunday, May 19
.

மஹா பெரியவா அனுபவங்கள்


"பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு சொல்லு ஏன்னா பாதத்திலே இருக்கிற ரேகை அழிஞ்சுடுமோன்னு ராமய்யர் பயப்படறார்னு சொல்லு!"*

(பெரியவா திருமேனிக்கு மங்கள ஸ்நானம் செய்வித்த ராமய்யர் ஸ்ரீமடம் பாலுவிடம் கூறியது மேலே)

கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீமடம் பாலு சபரிமலையை விட்டு இறங்கி எர்ணாகுளம் வந்து ஒரு வக்கீலின் வீட்டில் வந்து தங்கினார்.அங்கேயே உணவருந்தினார். வக்கீலின் தாயார் இவருக்கு ஆசி வழங்கிய பின்னர், "டேய் நீ ராமய்யர் மாமாவைப்பார்க்காமல் .போகாதே .மகாபெரியவா கிட்டேயிருந்து வந்திருக்கேன்னு சொன்னா அவர் ரொம்ப சந்தோஷப்படுவார்" என்று வற்புறுத்திச் சொல்லவே ஸ்ரீமடம் பாலு அதற்கு சம்மதித்தார்.

ராமய்யருக்கு வயது 90 இருக்கும். இவர் (பாலு) காஞ்சி மடத்தில் இருந்து வந்திருப்பதாகவும்ஸ்ரீமகாபெரியவாளிடம் கைங்கர்யம் செய்பவர் என்று தெரிந்ததும் அந்த முதியவர் இவர் காலில் திடீரென்று விழுந்து நமஸ்கரித்தார்.ஸ்ரீமடத்து பாலுக்கு உடலும் உள்ளமும் பதறியது .இவ்வளவு வயதானவர் நம் காலில் விழுவதா? அபசாரம் அல்லவா என்று பதறினார்.

"நான் ரொம்பச் சின்னவன்.எனக்குப் போய் நமஸ்காரம் பண்றேளே" என்று கண்களில் நீர்மல்க படபடப்புடன் சற்று தள்ளி நின்றார் ஸ்ரீமடம் பாலு "டேய் இந்த நமஸ்காரம் உனக்கில்லே.

.நீ கைங்கர்யம் செய்யறியே அந்த பகவானுக்கு என்றவர், டேய் ஸ்ரீபெரியவா சாட்சாத் ஈஸ்வரன் தாண்டா! அவர் சிரஸிலே சந்திரன் இருக்கு.கையிலே சங்கு சக்கரம் இருக்கு.பாதத்திலேயே ஸ்ரீ சக்ரவர்த்தி ரேகை இருக்கு. நீ பார்த்திருக்கியோ?" என்று ஓர் அபூர்வமான தகவலை சர்வ சாதாரணமாகக் கூறினார் முதியவர்.

"நாங்க அவாகிட்டேயே இருக்கோம். நீங்க சொல்ற மாதிரியான ஈஸ்வர அடையாள அம்சங்களை பெரியவாகிட்ட நாங்க பார்த்ததில்லையே" என்று குரலில் ஏக்கம் தொனிக்கச் சொன்னார் ஸ்ரீமடம் பாலு.

அதைக் கேட்ட ராமய்யர் விவரமாக பேச ஆரம்பித்தார்.
"ஒரு நிதர்சனமான உண்மையை உன்கிட்டே சொல்றேன். இதுவரையிலே இதை யார்கிட்டேயும் நான் சொன்னதில்லே ரொம்ப காலம் முன்னால, ஸ்ரீபெரியவா இங்கே வந்து தங்கி இருந்தா. தினமும் அதிகாலை மூணு மணிக்கு எழுந்துப்பார். அப்புறம் பூஜை, தரிசனம். இங்கே அக்கம்பக்கம் இருக்கிற கோயில்,உபன்யாசம்னு ராத்திரி பன்னண்டு மணி வரைக்கும் ஓயாம உழைப்புதான். இங்கே நாப்பது நாள் இருந்தா.அவர் தினமும் இப்படி சிரமப்படுவதை பாத்தப்போ என் மனம் வேதனைப்பட்டுது.அதனாலே ஒருநாள் பொறுக்க முடியாமே அவர் முன்னாலே கைகூப்பிண்டு நின்னேன்."

"என்ன வேணும்?" னு என்னண்டை கேட்டார்."அதைச் சொல்றதுக்கு எனக்கு பயமா இருக்கு"ன்னேன்."நான் ஒண்ணும் புலி,சிங்கம் இல்லே..பயப்படாமே சொல்லு" தினமும் காலம்பற மூணு மணியிலிருந்து நடு ராத்திரி வரைக்கும் உங்களுக்கு வேலை சரியா இருக்கு. கொஞ்சம் ஓய்வு வேண்டாமா? வாரத்திலே ஒரு நாள் உங்களுக்கு எண்ணெய் தேய்ச்சு ஸ்நானம் செஞ்சு வைக்கணுமுன்னு எனக்கு மனசிலே ஒரு ஆசை" என்று தயக்கதோட சொல்லி நிறுத்தினேன்.

அதைக் கேட்டு மகாபெரியவா கொஞ்சநேரம் யோசிச்சுட்டு, "ஓஹோ உனக்கு அப்படியொரு ஆசையா? சரி சனிக்கிழமை எண்ணெய் கொண்டு வா" என்று உத்தரவு போட்டார்.

துளசி,மிளகு போட்டு காய்ச்சின எண்ணெயுடன் நான் போனதும்,"
சனிக்கிழமை மறக்காமவந்துட்டியே"ன்னு
சொன்ன மகாபெரியவா,தன் திருமேனிக்கு மங்கள ஸ்நானம் செய்விக்க என்னை அனுமதிச்சா.

இது எனக்குக் கிடைச்ச பாக்யம்!" என்று சொன்ன ராமய்யர் பின்னர் சொன்னவை வியப்பூட்டும் விஷயங்கள்.

"பெரியவா சிரசில் எண்ணெய் தேய்த்தேன்.- சங்க சக்கர ரேகை தரிசனமாச்சு.கையில காலுல தேய்க்கறபோது சக்கரவர்த்தி ரேகைகள் தெரிஞ்சது.

 இதையெல்லாம் பார்த்தவுடன் எண்ணெய் பாத்திரத்தை அப்படியே கீழே வைச்சுட்டு பெரியவாளை நமஸ்காரம் செய்தேன்.
ஏன்னா, அவர் ஈஸ்வரனோட அவதாரம் என்பது எனக்குக் கொஞ்சமும் சந்தேகமே இல்லாமப் புரிஞ்சுடுத்து. அதனாலேதான் சொல்றேன். அவாளை விட்டுட்டு நீ எங்கேயும் போகாதே.நீ செஞ்ச புண்ணியம் அது. பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு சொல்லு ஏன்னா பாதத்திலே இருக்கிற ரேகை அழிஞ்சுடுமோன்னு ராமய்யர் பயப்படறார்னு சொல்லு!"

காஞ்சி மகானை விட்டு கடைசி வரை கண நேரமும் பிரியாமல் இருந்த ஸ்ரீமடம் பாலுவுக்கு என்ன பாக்கியம்.
    
Jaya Jaya Shankara hare hare Shankara
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.