நீதானே நீதானே கவிதை
தயக்கத்தின் நிறமாற்றி
என்னுள் மயக்கத்தை
விதைத்த மங்கை நீ
துயரக்கடலில் தத்தளித்த
என் படகுக்குக்கு
துடுப்பாய்வந்தவள் நீ
குழப்பங்களினால் மனம்
குன்றியிருந்தவேளைகளில்
விளக்கங்களால்
தெளியவைத்தவள் நீ
கானகவாழ்க்கையில்
கலங்கிநின்றபோது
கைகாட்டியாய்க்
காத்தவள் நீ
விருப்ப வன்மங்களை
பொறுப்பாக மாற்றி
இன்பங்களாக்கியவள் நீ
இதயத்தில் குடியேறி
இருளகற்றி வாழ்வின்
பொருளுரைத்த
மந்திரம் நீ
நீல நிலவொளியில்
நித்திரைக்குத்துணையாக
பத்திரமாக்கியவள் நீ
மண்ணில்வீழ்ந்த
என்மனதை கண்ணில்
வைத்துப்போற்றியவள் நீ
கவிச்சிகரம். அ.முத்துவிஜயன்