"மந்திரி மாமி எப்படி இருக்கா?"- பெரியவா
"மகாலக்ஷ்மியாட்டம் இருக்கா!" -பெண்
(பெண்ணின் பதிலில் நொடிப் பொழுதில் பிரச்னை தீர்த்த பெரியவா)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-86
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருந்தது. அவள் தாயாருடன் தரிசனத்துக்கு வந்தாள்.
"பெரியவாகிட்ட ரொம்ப பிரார்த்தனைப் பண்ணிக் கேட்டுக்கிறேன். என் பொண்ணு மூக்கு குத்திக்க மாட்டேங்கிறா...மூக்கு குத்திக்கல்லேன்னா... கல்யாணம் எப்படி பண்றது? பெரியவாதான் அட்வைஸ் பண்ணணும்.- தாயார்.
சற்று நேரம் கழித்து பெரியவாள் உள்ளே எழுந்து போய் விட்டார்கள்அந்த சமயம் அமைச்சர் ஸி.ஆர் பட்டபிராமனும்அவருடை மனைவியும் தரிசனத்துக்காக வந்தார்கள்.
அதுவரை கல்யாணம் செய்து கொள்ளப் போகிற பெண், ஸ்ரீபட்டாபிராமன் மனைவி அருகிலேயே உட்கார்ந்திருந்தாள்
பெரியவாளுக்குத் தகவல் கிடைத்ததும், அவர்கள் வெளியே வந்து ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்த பின் பிரசாதம்கொடுத்தனுப்பினார்கள்.மந்திரி தம்பதியர்களுக்கு.
அமைச்சர் தம்பதி எழுந்து சென்றதும், பெரியவாள் அந்தப் பெண்ணை பார்த்தார்கள்.
"மந்திரி மாமி எப்படி இருக்கா?"- பெரியவா
"மகாலக்ஷ்மியாட்டம் இருக்கா!" -பெண்.
"அந்த மகாலக்ஷ்மி மாதிரி நீயும் புல்லாக்கு போட்டுக்கோயேன்?- பெரியவா
ஒரு சொடக்
"வேண்டாம் பெரியவா! நான் மூக்குத்தியே போட்டுக்கிறேன்.." -பெண்.
நொடிப் பொழுதில் பிரச்னை தீர்ந்து விட்டதில். பெண்ணைப் பெற்ற தாயாருக்கு எக்கச்சக்க சந்தோஷம்!