அன்னை ஜிஜாபாய் வரலாறு!
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவள் அந்த ஜீஜாபாய்
ஒருவகையில் இந்திய சுதந்திரபோராட்டமே அவளிடமிருந்துதான் தொடங்கிற்று, ஆறு வயதில் இருந்தே இந்துராஜ்ய கனவை கண்டவள் அவள்தான்
தகப்பன் லக்கோஜி மொகலாயரிடமும் கணவன் ஷாஹாஜி பாமினி சுல்தான்களிடமும் அடியாட்களாய் இருந்ததை போல் தன் மகனும் இருந்துவிட கூடாது என சவால் எடுத்தவளும் அவள்தான்
இந்த சவாலுக்காக கணவனையும் தந்தையினையும் பிரிந்திருந்து தன் மகனை முழு இந்து ராஜ்ய ஜூவாலையாக எரிய வைத்தவளும் அவள்தான்
இந்துஸ்தான வரலாற்றில் தனி ஒருத்தியாக இருந்து சிவாஜி எனும் பெரும் கணலைஎழுப்பி , தன் சொந்தபந்தம் கணவன் தாய்தந்தை உறவு என எல்லோரும் ஏளனமாகவும் , ஒரு காலத்திலும் அமையாது என சொன்னதுமான "இந்து ராஜ்யத்தை" அமைத்து காட்டியவளும் அவள்தான்

சிவாஜிக்கு தாய்க்கு தாயாக, தளபதிக்கு தளபதியாக, ஆசானுக்கு ஆசானாக நின்றவள் அவள்தான்
சிவாஜியினை மட்டும் ஷாஹாஜி வளர்த்திருந்தால் அவன் பிஜப்பூருக்கோ மொகலாயருக்கோ ஒரு அடியாளாகவே இருந்திருப்பான், இந்தியா என்றோ பாகிஸ்தானின் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தானின் நீட்சியாக மாறியிருக்கும், அரேபியா சீன எல்லை வரை நீண்டிருக்கும்
இந்துஸ்தானம் எனும் தேசமும் மதமுமே அடியோடு ஒழிந்து கிரேக்க,ரோம மதம் போல் புதைக்கபட்டிருக்கும்
அவள்தான் இந்துராஜ்ய கனவை சிவாஜிக்கு ஊட்டி அவனை கொண்டே இந்து ராஜ்யம் ஸ்தாபித்தாள்
76 வயது வரை வாழ்ந்தவள் இயல்பிலே ஆஸ்துமா போன்ற நோயின் தாக்கம் கொண்டவள், இரு மகன்கள் மட்டுமே அவளால் பெற முடிந்தது, பிறப்பிலே இறந்த குழந்தைகள் ஏராளம்
அதுவும் மூத்தமகன் சாம்பாஜி இறந்தபின் சிவாஜி ஒரே மகன்
அந்த ஒரே மகனையும் சிங்கம்போல் வளர்ந்த்து, இந்துராஜ்ய அவசியம் கனவை எடுத்து சொல்லி அவனை முழு இந்துவீரனாக்கியவள் அவளே
அவளுக்காக, அவள் ஒருத்திக்காகத்தான் மாபெரும் இந்துராஜ்யம் அமைத்து அவள் காலடியில் போட்டான் சிவாஜி
இந்து ராஜ்ய மன்னனாக சிவாஜிக்கு முடிசூட்டி, தன் கண்ணெதிரே 600 ஆண்டுக்கு பின் முழு இந்து சுயராஜ்யம் உருவானதை கண்டு கண்மூடினாள்
அத்தோடு முடிந்தாளா இல்லை
அடுத்த சிலமாதங்களிலே தாராபாய் எனும் குழந்தை அதே வருடத்தில் பிறந்தது, அது சிவாஜியின் மகன் ராஜாராமை மணமுடித்தது
சாம்பாஜி, ராஜாராம் எனும் சிவாஜியின் இரு மகன்களும் மரணித்தபின் இனி இந்துஸ்தானம் எனக்கு என எழுந்த முதிர்ந்த அவுரங்கசீப்பை தனி ஒருத்தியாக படை திரட்டி போராடி விரட்டினாள் தாராபாய்
ஆம் மறுபடியும் இந்துராஜ்யத்தை கட்டி எழுப்பியவள் தாராபாய்தான்
தாராபாய் ஜீஜாபாயின் மறுபிறப்பு, மறுபடி பிறந்து இந்துராஜ்யம் காத்தாள் ஜீஜாபாய்
ஜீஜாபாய் பற்றி சிவாஜி தொடரிலே அதிகம் சொல்லிகொண்டிருப்பதால் இங்கு அதிகம் சொல்ல அவசியமில்லை
"என் மகனே, நீ மன்னராகிவிட்டாலும் தொடர்ந்து போராடு, 76 வயதை எட்டிவிட்ட நான் உன்னோடுவாளேந்த முடியாவிட்டாலும் மறுபடி மறுபடி பிறந்து இந்நாட்டையும் இந்துமதத்தையும் காத்து கொண்டே இருப்பேன்" என சொல்லி கண்மூடிய அந்த ஜீஜாபாயின் இடத்துக்கு இன்னொரு இந்துபெண் எக்காலமும் வரமுடியாது
அவளே சுதந்திரமான இந்துஸ்தானின் அடிக்கல்
தான் பிறக்கும் பொழுது பாரதம் முழுக்க பறந்த பச்சைகொடியினை அகற்ற பாடுபட்டு, தான் இறக்கும் பொழுது கம்பீரமாக காவி கொடியினை பாரதத்தின் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு பெரும் நிலத்தில் ஏற்றிவைத்த அந்த வீரத்தாய் சாதாரணம் அல்ல