வேண்டுதல்கள் - சிறுகதை
செல்லம்மாவுக்கு ஏற்கனவே ரெண்டு பொட்டபுள்ளங்க வீட்டுக்கு வாரிசுவேணும்னு மூணாவதா புள்ளத்தாச்சியானப்போ
ஆம்பளப்புள்ள குடு கருப்பு ரெட்டக் கெடா
வெட்டி பூசைபோடுறேன்னுவேண்டிகிட்டா.
ஆனா கருப்புக்கு பூசைமேல இஸ்டமில்ல போல அப்பையும் பொண்ணுதா பொறந்துச்சு
மாமியாகாரிகழுவிஊத்துனா செல்லம்மாவை
அதுக்குசன்னி வந்து இழுத்து கிட்டப்போ
கவனிக்காம விட்டுப் போய்சேந்துடுச்சு
சன்னி வரவச்சதே மாமியான்னு ஒரு சந்தேகம் இவளுக்கு எண்ணதேச்சி குளுப் பாட்டுனப்ப அந்த சந்தேகம் வந்துச்சுமாமியாவா வாங்கிக் குளுப்பாட்டினா.அப்ப அதுஒரு பழக்கமா இருந்துச்சு. பொம்பளைப்புள்ளக வேணாமுன்னா பொறந்தவன்ன குளுற எண்ணைதேய்ச்சிக்குளுப்பாட்டி ஈரத்தோட போட்டுறது.அதுக்கு குளிர்தாங்காம சன்னி வந்து போய்சேந்துடும். கேட்டா அது இருந்து வளந்து கஸ்ட்டப்பட்டுப்போறதுக்கு மொதல்லயேபோய் சேரட்டுமுன்னு ஈவு எறக்கமில்லாம சொல்லிப்புடுவாக வா கூசாம
அதுக்கப்புறம் செல்லம்மா முழுகாம இருந்தா. அப்பயிருந்து சொல்ல ஆரம்பிச்சிட்டா மாமியார்காரி. நல்லா வேண்டிக்க ஆம்பளைப்புள்ள பொறக்கனும்னு அப்புறம் மாறிச்சின்னா நான் மனுசியா இருக்க மாட்டேன் என்ன சொல்லிக்குத்தமில்லன்னு தீர்மானமா சொல்லிப்புட்டா.
ஆமா இப்ப மட்டும் மனுசியாவா பேசுறன்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டா செல்லம்மா. அவளும் என்னாத்தப்பன்னுவா. அவ கையிலயா இருக்கு ஆம்புளப்புள்ள பெக்குறது
அப்புடி இப்புடிப்பொழுது போயி மாச மெல்லாம் கடந்து இப்போ செல்லம்மா ஒம்போதாம் மாசம் , இப்பவோ அப்பவோன்னு
வயிறு சரிஞ்சுகெடக்கு மாமியாகாரி சொல்லிப்புட்டா
ஆம்பளபுள்ளயோட வந்தா வா இல்ல அங்குன குள்ளயேதூக்கிப்போட்டுட்டு வந்துரு பொட்டையோட வந்துராதன்னு இதே மாமியாதான் மாடு காளைக் கண்ணு போட்டப்ப பசுமாட்டத்திட்டுனவ, அவளுக்கு எல்லாம் அவ விருப்பப் படிதான் நடக்கனும்
அன்னிக்கிபாதிராத்திரில வலி வந்துடுச்சு ஆட்டோவைக்கூப்புட்டுஆசுபத்திரிக்கி தூக்கிட்டு ஓடுனாக அவசரமா பனிக்கொடம்
வேற ஒடஞ்சிடுச்சு பதட்டத்தோட ஆசுபத்திரில சேத்தாக,
வலில கத்திக்கிட்டுருந்தா செல்லம்மா. வலியோட என்னா புள்ள பொறக்கப் போகுதோன்ற கவலைதான் வலிச்சிச்சி அதிகமா. அப்பயும் கருப்ப வேண்டிக்கிட்டா. சாமி வெள்ளக்குதுரையில ஏறிவார கருப்பு ஒனக்கு ரெட்டக்கெடாவெட்டி பூசையப் போடுறேன் . ஆம்பளைப் புள்ளயாக்குடுன்னா. இனிமேயா ஆகப்போகுது. அது ஏற்கனவே உருவாயிருச்சு.....
அவளுக்குப் பக்கத்துல நாப்பது வயசுல ஒரு அம்மாவும் கத்திட்டுருந்தா அவளோட புருசன் ஆறுதல் சொல்லிட்டிருந்தான்இந்தத் தடவ கொழந்த நல்லாப் பொறக்கும் கவலைப் படாதேன்னுகொஞ்சம் வலி நின்னப்ப விசாரிச்சா அந்தம்மாவைஅவசொன்னா கொழந்த தங்கமாட்டீங்குது ரொம்ப டிரீட் மெண்டெல்லாம் எடுத்து இது நின்னுருக்கு
அல்லாபுண்ணியத்துலநல்லாப் பொறக்கனும்னு இப்போ செல்லம்மாவும் வேண்டிகிட்டா . அப்ப செல்லம்மா நெனச்சா. என்னா ஒலகம் ஒருபக்கம் ஆம்பளைப்புள்ளதான் வேணுமுன்னு வேண்டுதல் இன்னொருபக்கம் நல்லபடியா ஆணோ பொண்ணோ நல்லபடியாக் கொழந்தையக்குடுன்னு வேண்டுதல் அவ கருப்புகிட்ட மனசார ரெண்டுபேருக்கும்சேத்து வேண்டிக்கிட்டா,
அப்பரெண்டுபேருக்கும் வலி முத்திடுச்சு
நர்சம்மா இன்னும் முக்கும்மா முக்கும்மா ன்னு சொல்லிட்டுருந்தா அந்தம்மாவும் கத்திட்டு இருந்தா நர்சம்மா நல்லபடியா பொறக் கும்ன்னு சொல்லிகிட்டு இருந்தா
செல்லம்மா ஆம்பளப்புள்ள பொறக்கனும்னு கருப்ப வேண்டிட்டுருந்தா.ரெண்டுபேருக்கும் கொழந்தபொறந்துச்சு அல்லாவும் கருப்பும்
கூட்டணி அமைச்சி கண்டுக்கலசெல்லம்மா வுக்கு மறுபடிபொட்டப்புள்ளதான் அந்தம்மா புள்ள பொறக்கும்போதுமூச்சுத்திணறிசெத்தே ஆம்பள ப்புள்ளபொறந்துச்சு
செல்லம்மாநெதானத்துலதானிருந்தாஆனா அந்தம்மா மயங்கிட்டா செல்லம்மா நரஸம் மாவக் கூப்புட்டா அக்கா செத்த புள்ளய எங்கிட்டகுடு இந்தப்புள்ளய அங்ககுடுத்துறு இது வீட்டுக்குபோனோ கொண்டு புடுவாய்ங்க எங்குனக் குள்ளயாவது உசுறோட இருக்கட்டும்
அவங்களுக்கு நெதானம் வாரதுக்குள்ள மாத்திடுங்கபுண்ணியமாப்போவும்காலைப்புடிச்சிக்கேக்குறேன்னுஅழுதுகிட்டே சொன்னா
நரசம்மா ஒருநிமிசம் கூட யோசிக்கல அந்தம்மா வோட புருசனக்கூப்புட்டுசொன்னா அய்யா உங்களுக்கு பொம்பளப்புள்ள பொறந்துருக்குன்னு
அவருக்குசந்தோசம் தாங்கல யா அல்லான்னு தொழுகப்போய்ட்டாரு மாமியாகாரி கேட்டா நர்ஸம்மாகிட்ட இது என்னாபெத்துச்சுன்னு
நர்ஸம்மா சொன்னா ஆம்பளப்புள்ளன்னு
ஆனா மூச்சில்ல போய்டுச்சுபோலன்னு
மாமியாகாரிஅய்யோஆம்பளப்புள்ளபோச்சான்னு அடிச்சிக்கிட்டா. மாமியாகாரி இம்புட்டு வரமிருந்து தவமிருந்து பெத்தபுள்ள போயிடுச்சான்னு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிட்டா....
இதுக்கு நடுவுல பெரியடாக்ட்டரு வந்தாரு செத்ததாச் சொன்னபுள்ளையப் பாத்தாரு விசயம் கேட்டாரு ஒடனே செயல் படத் தொடங்கினாரு தட்டி கிட்டு ஏதோ பண்ணாரு. ஒன்னும் பலனளிக்கல. அது அசையல. அப்ப நர்சம்மா நான் முயற்ச்சி பண்ணுறேன்னு அவசரமா உள்ளேபோய் மெழுகுவர்த்திய எடுத்துவந்து பத்த வைச்சி உருகுன மெழுக அந்தக்கொழந்த கையில கொஞ்சமா ஊத்துனாக கொழந்த நெழிய ஆரம்பிச்சி வீல்ன்னு கத்துச்சு
ஒடனே டாக்குட்டரு நல்ல ஐடியான்னு பாராட்டுனாருகொழந்த அழுது கத்தி ஊரக் கூட்டுனது.கொழந்தபொழச்சிக்கிட்டவன்னே மாமியாகாரிகருப்பு ஒனக்கு ரெட்டக் கெடாபூசை போட்டுருறேன்சாமின்னா
செல்லம்மா நர்சம்மாவைபாத்தா நர்சம்மா சைகையில் காமிச்சா அமைதியாயிருன்னு நர்சம்மாகழுத்துல இருந்தசிலுவைய எடுத்து முத்தமிட்டாஎல்லாம் கர்த்தர் செயல்ன்னு
அவசட்டையில ரோஸ்மேரின்னு பேரு இருந்துச்சு செல்லம்மாகண்ணுலகண்ணீர் வழிஞ்சது...நீதாம்மா எனக்குக்கருப்புன்னா
எப்படியோ அல்லாபேரும் கருப்புபேரும் காப்பத்தப்பட்டது, பரவாயில்லயே கருப்பும் அல்லாவும் கர்த்தரும் கண்ணுக்குத்தெரியாத கூட்டணி அமைச்சி எல்லாத்தையும் சந்தோசப்படுத்தீட்டாங்களேன்னா செல்லமா. ட
மாமியாகாரி வந்து புள்ளை அப்புடியே அவ அப்பனை உரிச்சிவைச்சிருக்குன்னு கொஞ்சினா அந்தம்மாபுருசன் வந்து பாத்துட்டு யா அல்லா அம்மாமாதிரியே பொண்ணுன்னார்
செல்லம்மாவும் ரோஸ்மேரியும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கிட்டாங்க... அப்பரோஸ் மேரி சொன்னா நம்பிக்கைதான் வாழ்க்கைன்னு.....
மொதல்ல அல்லாவையும் கருப்பு வையும் கைவிட்டுட்டதா அவசரப்பட்டு திட்டுன அவங்க ரெண்டுபேரும் நெனைச்சிக்கிட்டாங்க. அப்ப ரோஸ்மேரி கழுத்தில இருந்த சிலுவையில கர்த்தரும் பாத்தமாதிரி இருந்துச்சு.......
நாம ஒன்னு நெனைக்க தெய்வம் என்ன நெனைக்கிதுன்னு ஆருக்குத்தெரியும் ...
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை நு
கண்ணதாசன் பாடல் எங்கிருந்தோ ஒலிச்சது....
- அ.முத்துவிஜயன்