இன்றைய ராசி பலன்கள் - திங்கள் கிழமை (03.11.2025)
மேஷம்
முக்கியஸ்தர்களின் உதவி நம்பிக்கை தரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். உணவு விஷயத்தில் அக்கறை செலுத்தவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
ரிஷபம்
முடியாத வேலைகளை செய்ய வேண்டாம். பிரியமானவர்களிடம் அனுசரித்து போகவும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.
மிதுனம்
சாதுர்யமான பேச்சு காரிய வெற்றிக்கு உதவும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோகத்தில் அலைச்சல் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் சீராக இருக்கும்.
கடகம்
தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
சிம்மம்
குடும்பத்தில் மனநிம்மதி ஏற்படும். புதிய கோணத்தில் சிந்தித்து செயல்பட முடியும். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
கன்னி
சுற்றத்தாரின் ஆதரவு பெருகும். உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
துலாம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். வீண் சண்டை, சச்சரவுகளை தவிர்க்கவும். மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
விருச்சிகம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
தனுசு
கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். அடிக்கடி மறதி தொல்லை வரும். நல்ல தகவல் வந்து காதில் விழும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
மகரம்
குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். திட்டமிடாத செலவுகளை சமாளிக்க வேண்டி வரும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கும்பம்
குடும்பத்தில் குழப்பான சூழல் காணப்படும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். பயணங்கள் அனுகூலமான திருப்பங்களை தரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மீனம்
பொது காரியங்களில் ஈடுபாடு வரும். மனதில் ஏற்பட்ட குழப்ப நிலை நீங்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறக்கும்.ராசிக்குள் சந்திரன் இருபாபதால் மனக்குழப்பங்கள் ஏற்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்க வேண்டாம்.