கோவையில் “GO GLAM SHOPPING” கண்காட்சி திறப்பு – லீமாரோஸ் மார்டின்

kovai-go-glam-shopping-exhibition-lema-rose-martin
கோவையில் “GO GLAM SHOPPING” கண்காட்சி திறப்பு – லீமாரோஸ் மார்டின்

கோயம்புத்தூர், அவினாசி சாலையில் உள்ள நவா இந்தியா சந்திப்பு அருகேயுள்ள சுகுணா மண்டபத்தில், அக்டோபர் 23 முதல் 25 வரை மூன்று நாட்கள் நடைபெறும் “GO GLAM SHOPPING” தீபாவளி சிறப்பு விற்பனைக் கண்காட்சியை, லால்குடி சட்டமன்ற உறுப்பினரும், Rotary Club of Coimbatore Aakruthi அமைப்பின் முன்னாள் தலைவரும், Rotary International மாவட்டம் 3206-ன் சமூக சேவைத் தலைவருமான டாக்டர் லீமாரோஸ் மார்டின், MLA, அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கேற்றி 75-வது அரங்கினைத் திறந்து வைத்தார்.

கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான Rtn. ஹீனா மற்றும் ராகுல் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில், கீர்த்தனா கார்த்திக், கவுரி, அலமேலு, மஞ்சுளா, ஜீவிதா, மஹிமா, சாய் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கண்காட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், நகைகள், அணிகலன்கள், கைப்பைகள், காலணிகள், வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொல்கத்தா, லூதியானா, குஜராத், டெல்லி, ஜெய்ப்பூர், புனே உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பிரத்யேகமாகக் கொண்டுவரப்பட்ட ஆடைகள் மற்றும் அணிகலன்கள் இக்கண்காட்சியின் சிறப்பம்சங்களாகும். கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கண்காட்சியில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

பெண்களின் தொழில்முனைவு, வணிக வளர்ச்சி மற்றும் உள்ளூர் பொருளாதார முன்னேற்றத்திற்கு இத்தகைய கண்காட்சிகள் வாய்ப்புகளை உருவாக்குகின்றன.