குருபகவான் அதிசார பலன்கள் 2025 - மகரம்
கடந்த அக்டோர் 18-ம் தேதி குருபகவான் அதிசார கதியாக மிதுனராசியில் இருந்து கடகராசிக்குள் நுழைந்திருக்கிறார். வரும் டிசம்பர்மாதம் வரை கடகராசிக்குள் இருந்து மீண்டும் மிதுன ராசிக்கு திரும்பி செல்வார். இந்த அதிசார பலன்கள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம்.
6-ம் இடத்தில் இருந்த குரு பகவான் களத்திர ஸ்தானமான 7-ம் இடத்துக்கு வருகிறார் இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும் கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் குடும்பத்தில் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் எளிதில் கிடைக்கும் உறவினர்களால் நன்மைகள் உண்டாகும் எதிர்பார்த்த நல்ல செய்தி ஒன்று கிடைக்கும்.
குருபகவான் பார்வை படும் இடங்களின் பலன்கள் 5-ம் பார்வையாக 11-ம் இடமான லாப ஸ்தானத்தை பார்ப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகமாக கிடைக்கும் பண தேவைகள் பூர்த்தியாகும் புதிய மனிதர்களின் சந்திப்பு நிகழும் அவர்களால் ஆதாயம் பெறுவீர்கள் போட்டி தேர்வுகள் எளிதில் வெற்றி பெறுவீர்கள் மூத்த சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.
7-ம் பார்வையாக ராசியை பார்ப்பதால் கற்பனை வளம் அதிகமாக காணப்படும் நினைத்த காரியம் யாவும் வெற்றைியை தேடித் தரும் உடல் ஆரோக்கியமாக காணப்படும் மருத்துவ செலவுகள் கட்டுக்குள் வரும் வெளிநாடு வேலைவாய்ப்புகள் உருவாகும் பங்குச்சந்துகள் டிரேடிங் மூலமாக லாபம் எதிர்பார்க்கலாம்.
9-ம் பார்வையாக 3-ம் வீட்டை பார்ப்பதால் பெயர் புகழ் அந்தஸ்து கௌரவம் உண்டாகும் அரசியல் செல்வாக்கு கூடும் கடன் சுமைகள் குறையும் விற்பனை ஆகாத பழைய சொத்துக்கள் விற்பனை செய்து பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் ஹனுமன் வழிபாடு செய்து வாருங்கள் அமாவாசை அல்லது பௌர்ணமி திதியன்று குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.