செப்டம்பர் மாதம் 2025 - ரிஷபம் ராசி பலன்கள்

september-2025-rishabam-rasi-palangal
செப்டம்பர் மாதம் 2025 - ரிஷபம் ராசி பலன்கள்

2,ம் இடத்தில் குரு இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். 11ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் புதிய தொழில் வாய்புகள் உருவாகும்.

ராகு 10-ம் இடத்தில் பலம் பெற்றிருப்பதால் வெளியூர் பயணம் மேற்கொள்ளுவீர்கள். சுக்கிரன் 3-மற்றும் 4ம் இடங்களில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் பொறுப்புகள் கூடும்.

செப்டம்பர் 14ம் தேதி செவ்வாய் 6-ம் இடத்துக்கு செல்வதால் தொழில் போட்டிகள் குறையும் எதிரிகள் விலகுவார்கள்.சகோதரர்களுக்குள் அன்பு அதிகரிக்கும்.
15-ம் தேதிவரை புதன் பலமாக 4ம் இடத்தில் வலம் வருவதால் புத்தி கூர்மையால் எதையும் சாதித்து காட்டுவீர்கள் பங்குசந்தை முதலீடுகள் லாபத்தை தரும்.
இம்மாதம் சூரியன் 4-5ம் இடங்களில் பலவீனப்படுவதால் அரசாங்க பகை வரக்கூடும் மறைமுக எதிர்ப்புகள் வரும்.

4-ம் இடத்தில் கேது இருப்பதால் தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

செப்டம்பர் 2,3,4,சந்திராஷ்டமம்

பரிகாரம்!
திங்கட்க்கிழமை நவகிரக சந்திரனுக்கு அர்ச்சனை செய்தூவரவும் பெருமாள் வழிபாடு சிறப்பைத்தரும்.