மீனம் - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026

meenam-ragu-kethu-peyarchi-palangal-2026
மீனம் - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026

டிசம்பர் 5, 2026, கார்த்திகை 19-ம் தேதி சனிக்கிழமை இரவு 10:32 மணிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கக் கணிப்புப்படி ராகு+கேது பெயர்ச்சி நிகழ்கிறது.

இடம் மாற்றம்: ராகு கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு (அவிட்டம் 3-ம் பாதத்திலிருந்து 2-ம் பாதத்திற்கு) பெயர்ற்சியாகிறார்.

கேது பெயர்ச்சி: கேது சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கு (மகம் 1-ம் பாதத்திலிருந்து ஆயில்யம் 4-ம் பாதத்திற்கு) பெயர்ச்சியாகிறார்.
கால அளவு: ராகு-கேது மாற்றங்கள் சுமார் 18 மாதங்களுக்கு ஒருமுறை நிகழ்வதாகும்.

மீனம் - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026

இதுவரை ராசிக்கு 12-ம் இடத்தில் இருந்த ராகு 11-ம் இடத்திற்கும் 6-ம் இடத்தில் இருந்த கேதுவும் 5-ம் இடத்திற்கும் இடப்பெயர்ச்சி ஆகிறார்கள்.
ராகு 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருவதால் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் நல்ல லாபத்தை பெறுவீர்கள், புதிய தொழில் மூலமாகவும் கூட்டுத்தொழில் மூலமாகவும் லாபம் பன்மடங்கு உயரும், புதிய வியாபார யுக்திகளை கையாளுவீர்கள், ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் சிறப்படையும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வு கிடைக்கும், குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் கணவன் மனைவி உறவு பலப்படும், உறவினர்களில் இருந்து வந்த பகைகள் மறையும் நல்லிணக்கம் உருவாகும், கடன் சுமைகள் குறையும் சேமிப்புகள் உண்டாகும் புதிய வாகன யோகமும் உண்டு.

6-ம் இடத்திலிருந்து கேது 5-ம் இடத்திற்கு பின்னோக்கி செல்வதால் பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள், அவசர முடிவுகளால் பண இழப்புகள் உண்டாகும், பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனத்தை செலுத்தவும் புதிய நபரிடம் எச்சரிக்கையாக பழகவும் ஆடம்பர செலவுகள் தவிர்க்கவும்.

பரிகாரம்:
வாரந்தோறும் வருகிற செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக ராகு கேதுவுக்கு அர்ச்சனையும் துர்க்கை அம்மனுக்கு ராகு கால வேளையில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள் நல்லது நடக்கும்.