அரகஜா தாந்திரீக பொருள் பூஜை பலன்கள்!
அரகஜா நம் பலருக்குத் தெரியாமல் போன ஒரு தாந்திரீக பொருள்.
நம் குலதெய்வத்தை வீட்டிற்கு வர வைக்கும் ஒரு தாந்திரீக பொருள் அரகஜா. இது சிவ வழிபாட்டிற்கும், காலபைரவரின் வழிபாட்டிற்கும், அபிஷேகத்திற்கு பயன்படும் ஒரு தாந்திரீக பொருள்.
அத்தர் புனுகு, ஜவ்வாது, ஜாதிபத்திரி, சாதிக்காய், கற்பூரம், போன்ற இன்னும் பல மூலிகைப் பொருட்களால் உருவான பொருள். இதனுடைய பலன் அபரிமிதமானது,
பலருக்கு குலதெய்வம் தெரியவில்லை என்றாலும், குலதெய்வத்தை வரவழைக்க இந்த அரகஜா மிகவும் நமக்கு துணை புரியும், வீட்டில் குலதெய்வத்திற்கு வழிபாட்டிற்கு மஞ்சள் அரகஜா இரண்டையும் ஒன்றாக கலந்து திலகமிட்டு குலதெய்வ வழிபாடு செய்தால் நம் குலதெய்வம் நம் இருப்பிடம் தேடி வரும்.
இதை நம் திலகமாக இட்டுக்கொண்டால் நம் மனதில் ஏற்படும் தீய சிந்தனைகளில் இருந்து விடுபடலாம். அருள் கிடைக்க இந்த அரகஜா திலகம் இட்டுக் கொள்ளலாம்.
மேலும் சிவனுக்கும் தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கும் அபிஷேகம் செய்வதற்கு இந்த அரகஜா நாம் தானமாக ஆலயத்திற்கு வாங்கி தரலாம். இதனால் நமக்கு மிகப்பெரும் புண்ணியங்கள் வந்தடையும்,
சனி திசை, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஏழரைச் சனி, போன்ற சனியின் திசைகளின் பாதிப்பு விலகும். சனியின் புத்தி சனியினுடைய அந்தரம் போன்ற காலங்களில் இந்த அரகஜாவை சனீஸ்வர பகவானை வணங்கி நெற்றியில் இட்டுக்கொண்டால் சனியினுடைய பாதிப்பு நம்மை விட்டு மிகவும் விலகும்.
வீடுகளில் வழிபாடு செய்யக்கூடிய இடங்களில் வியாபாரம் செய்யக்கூடிய ஸ்தலங்களில் அரகஜா மஞ்சள் இவைகளை திலகமாக சுவர்களில் இட்டு வழிபாடு செய்தாலும் அந்த இடம் நேர்மறையான சக்திகளை வைத்து தெய்வீக ஆற்றலை அங்கு நடமாட செய்யும்.