தூங்குவதற்கு முன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

sleep-well-slogam
தூங்குவதற்கு முன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

அச்சுதான்னு பாய்போட்டு
அனந்தான்னு தலையணை வச்சு
க்ருஷ்ணான்னு படுத்தபேருக்கு
கிலேசம் இல்லாம இருக்கணும்
மெய்க்கூடு கொண்டு பொய்க்கூடு
விட்டு புறப்பட்டு போகும்போது
திருமாலை தொங்கத் தொங்க
ஸ்ரீராமனே எதிரே வரணும்…
 #ஸ்வாமி தேசிகனோட கோபால விம்சதி ஸ்லோகம்
அதராஹித சாருவம்சநாளா:
மகுடாலம்பி மயூரபிஞ்ச்சமாலா:
ஹரிநீல சிலா விபங்கநீலா:
ப்ரதிபாஸிந்து மமாந்திம ப்ரயாணே:

அழகிய திருப் புல்லாங்குழலை திரு அதரத்தில் வைத்து உள்ளவனாகவும் திரு முடியில் சரிந்து இருக்கும் மயில் பீலியை உடையவனாகவும் இந்திர நீல மணி துண்டம் போலே -வேணு கோபாலனது நீல நிற திவ்ய மங்கள விக்ரஹ ஸ்ம்ருதி எனது அந்திம காலத்திலும் இருக்க அருள் செய்வாய்!
ப்ரபன்னர்களுக்கு, அதாவது பகவானிடத்தில் சரணாகதி பண்ணிக்கொண்டவர்களுக்கு அந்திம ஸ்ம்ருதியே தேவையில்லை.

 கடைசி காலத்தில் பகவானை நினைத்துக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை. முன்னாடியே சொல்லிவச்சுடு. நான் எப்ப வேணுமோ எடுத்துக்கறேன்னு வராஹ பெருமான் சொல்கிறார். ஏன்னா கடைசி காலத்துல கண் மங்கி, காது போய், தொண்டை அடைத்து, பேச்சுபோய், இந்திரியமெல்லாம் இறங்கிபோனபின்னே நினைக்கக் கூட முடியாத கோமால போய்ட்டா… என்னாறது? அதுக்குத்தான் அப்போதைக்கு இப்போதே சொல்லிவச்சுடலாம்.

சரி… இந்த அதராஹித சாரு வம்ச நாளான்னா

சதா இந்த புல்லாங்குழல் உன்னுடைய அதரத்தோட இனிமையை பருகிண்டு இருக்கு. அந்த மாதிரி என் உதடு வாயெல்லாம் வறண்டு போகின்ற காலத்தே, உன் அதராம்ருதம் எனக்கு உயிரூட்டணும்னு சொல்றார். ஆண்டாள் பாடறாளே…

நெடுமால் ஊதி வருகின்ற குழலின் தொளை வாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே…அந்த அதராம்ருதத்தை தரமாட்டீர்களான்னு கேக்கறா!

என் தொண்டை வறண்டு போன காலத்தே , நீயேவந்து அந்த புல்லாங்குழல் வாசிச்சுண்டு வரணும். அப்ப அந்த குழல்லேர்ந்து தெறிக்கற நீர் எனக்கு உணர்வு தந்து பேச வச்சு உன் நாமத்தை சொல்லவச்சுடும் அப்படிங்கறார் தேசிகர்

அச்சுதா அனந்தா க்ருஷ்ணான்னு சொல்லிட்டு, ராமரை வரச்சொல்றாளேன்னு. கொஞ்சமா யோசிச்சுப் பாத்தா, மரமண்டைல உதிச்ச ஒரு காரணம் தான் தோணித்து.

இந்த க்ருஷ்ணன் தன்னோட அந்திமகாலத்துல கூட இத்தனை பேர் இருந்தும் ஒருத்தரையும் அழைச்சுக்காம கிளம்பிட்டார். 

ஆனா ராமர் அப்படியில்ல.
கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ
புல் பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நல் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நல் பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே?

அசேதனத்துல ரொம்ப அற்பமானது புல். அதேமாதிரி சேதனத்துல (உயிருள்ளவை) மிக அற்பம் எறும்பு, புழு, பூச்சி. அதைக்கூட விடாம அழைச்சுண்டு போயாச்சே! அதே மாதிரி அடியேனும் ஒரு அற்பன். அதனால கட்டாயம் வந்து கைவிடாம காட்சி கொடுத்து கையைப் பிடிச்சு கூட்டிண்டு போயிடணும்னு தான் ஸ்ரீராமனே எதிரே வான்னு சொல்லிடனும்.

“முறை செய்து காப்பாற்றும் மன்னவன், மக்கட்கு
இறை என்று வைக்கப் படும்”

அதனால அனைத்து ஜீவராசியையும் காப்பாற்றிய வள்ளன்மை கொண்ட ராமனைக் கூப்பிட்டுட்டார் தேசிகர்.