குருநாதர் காரைச் சித்தர்
காரைச் சித்தரின் இயற்பெயர் சக்கரவர்த்தி ராகவ ஐயங்கார். இவர், கிருஷ்ணமாச்சாரியார் - ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு, 1918ல் ஆடிப்பூர தினத்தன்று வலங்கைமான் அருகே உள்ள நாகரசம்பேட்டையில் பிறந்தார்.
காரைச் சித்தர், மன்னார்குடியை அடுத்த காரைக் கோட்டையில், தன் அத்தை இல்லத்தில் வளர்ந்தார். காரைச் சித்தர் தனது பன்னிரண்டாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். நாடோடியாக அலைந்தார்.
தாயின் வற்புறுத்தலுக்கு இணங்கி சுலோசனா என்ற பெண்ணை மணம் செய்துகொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டார். ரேணுகா தேவி, ரவிகுமாரன் என்ற இரு மகவுகளுக்குத் தந்தையானார்.
சில வருடங்களுக்குப் பின் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார். புனே சென்று அரசாங்க ஆயுதச் சாலையில் சிறிது காலம் பணிபுரிந்தார். பின் அதிலிருந்து விலகி இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்றார்.
அங்கும் நாடோடியாகச் சுற்றியவர் பின் இந்தியா திரும்பினார். காந்திஜியின் வார்தா ஆசிரமத்தில் சில காலம் தங்கிப் பணி செய்தார்.
காரைச் சித்தர் இந்தியாவில் திருப்பதிக் காடுகளில் ஒரு வருடம் தனியாக வாழ்ந்தார். பின் வட இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்தார். இமயமலையில் சில வருடங்கள் வசித்தார். சாதுக்கள் தரிசனம் பெற்றார்.
தனக்கான சரியான குருவைத் தேடி அலைந்தார். ஒருநாள் தேடலில் லக்ஷ்மண் ஜூலாவில் தன் குருநாதரைக் கண்டடைந்தார். அவருடன் குருகுல வாசம் செய்தார். அவரிடமிருந்து தீக்ஷை பெற்றுத் துறவியானார்.
இறுதியில் தன் சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தோடு ஒட்டாமல் தனியாக வசித்தார். பல்வேறு சித்துகளைச் செய்தார். தம்மைப் பற்றிக் கேள்விப்பட்டு வந்த நோயாளிகளுக்குச் சந்தனம் அளித்து நோய்களைத் தீர்த்தார்.
அவர் காரைக் கோட்டையைச் சேர்ந்தவர் என்பதால் மக்கள் அவரைக் 'காரைச் சித்தர்' என்று அழைத்தனர்.
ஒரு சமயம் குடமுருட்டி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்தனர். அப்போது அங்கே வந்த காரைச் சித்தர், நீரோட்டத்தை நிறுத்தி அவர்களை ஆற்றைக் கடக்கச் செய்தார்.
டைரக்டர் சுப்ரமண்யம், (நாட்டிய மேதை பத்மா சுப்பரமண்யம் தந்தையார்) நடிகர் சாரங்கபாணி, நடிகர் ரஞ்சன் ஆகியோர் சுவாமிகளை தரிசிக்க சாந்த வெளி வந்து இருந்தனர். ரஞ்சன் மட்டும் நம்பிக்கை இன்றி அலை பாயும் மனதுடன் சாயங்கால தீபாராதனை பார்க்க சுவாமிமலை சென்று விட வேண்டும் என்று அவசரப்படுத்திக் கொண்டு இருந்தார். சுவாமிகளிடம் சாரங்கபாணி இதைக் கூற அருகில் இருந்த திரை ஒன்றை சுவாமிகள் விலக்கினார். சுவாமிநாத ஸ்வாமியும் குருக்கள் தீபாராதனை காட்டுவதும் முப்பரிமாணமாக காட்சி அளித்தது. ரஞ்சன் மன்னிப்புக் கேட்டு தம் நீளமான புலிநகம் கோர்த்த தங்க சங்கிலியை சுவாமிகள் பாதத்தில் வைத்து வணங்கினார். சுவாமிகள் தம் பிரம்பால் அந்த சங்கிலியைத் தொட்டார். அது கருநாகமாக ஊர்ந்து சென்று அருகில் இருந்த புதரில் சென்று மறைந்தது, எல்லோரும் திகைத்து நின்றனர்.
சுவாமிகள் மின்சார தொழில் புரிவோரிடம் கெட்டி செப்புக் கம்பி வாங்கி வைத்துக் கொள்வார். தினசரி ஒரு துண்டு அதை வெட்டி தங்கமாக்கி பக்தர்களிடம் கொடுத்து கும்பகோணம் பெரிய தெரு@ காசுக் கடையில் விற்று வரச் செய்து அதைக் கொண்டு அன்று வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வார். ஒரு முறைசாதம், சாம்பார். ரசம், பொரியல் தீர்த்து விட்டது. பணியாட்கள் வந்து சுவாமிகளிடம் தெரிவிக்கவே, அருகில் இருந்த நொச்சி இலையுடன் கூடிய குச்சியை எடுத்து சமைத்த பாத்திரங்கள் மீது ஓங்கி அடித்தார். மீண்டும் சமையல் உணவுப் பண்டங்கள் பொங்கி வழிந்தன. ஆனால் மேலும் சுவையுடன் இருந்தன.
காரைச் சித்தர் ரசவாதம் அறிந்தவர் எனவே ஒரு சமயம் அவரது சித்தாற்றலைப் பரிசோதிக்க வெளிநாட்டவர் சிலர் வந்திருந்தனர்.
அப்போது சுவாமிகள் ஆலங்குச்சியால் பல் துலக்கிக் கொண்டிருந்தார். சித்தர் பல் துலக்கிக் கொண்டே அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். திடீரென அக்குச்சியை அவர்கள்மீது வீசினார். அவர்கள் திடுக்கிட்டனர். அக்குச்சி கீழே விழுந்து வெள்ளிக்குச்சியாக மாறி இருந்தது.
காரைச் சித்தர் மீண்டும் அவர்களிடம் பேசிக் கொண்டே வேறொரு குச்சியை அவர்கள் மீது வீசினார். இப்போது அது தங்கமாக மாறி இருந்தது. காரைச் சித்தரின் அற்புதச் சித்தாற்றலை நேரடியாக உணர்ந்த அவர்கள் அவரைப் பணிந்து விடைபெற்றனர்.
சுவாமிகளது சொந்த ஊரில் நண்பர்கள் சிலரின் நிலங்கள் இருந்தன. அங்கிருந்த வன்முறையாளர் ஒருவர் மாந்திரீகத்தால் அவர்களுக்குத் தொல்லை அளித்து வந்தார்,. அவர்கள் காரைச் சித்தரிடம் முறையிட்டனர்.
உடனே அவர்களுடன் அந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரைக் கண்ட அந்த துஷ்டன் சித்தரை வெட்ட அரிவாளைத் தூக்கினான். சித்தர் அவனை உற்றுப் பார்த்தார். அவ்வளவுதான். அவனால் கைகளை அசைக்கவே முடியவில்லை. ஓங்கிய கை அப்படியே நின்றுவிட்டது.
அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் மன்னிப்பு வேண்டிய பிறகு சித்தர் மீண்டும் அவனை உற்றுப் பார்த்துச் சிரித்தார். அவனது கை மீண்டும் முன்போல் செயல்பட்டது. சுவாமிகளின் சித்தாற்றலை அறிந்த அவன் அது முதல் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் அமைதியாக வாழ்ந்தான்.
எஸ். அம்புஜம்மாள், எழுத்தாளர் ந. பிச்சமூர்த்தி, ச.து.சு. யோகியார் உள்ளிட்ட பலர் சித்தரின் பக்தர்களாக இருந்தனர். எஸ். அம்புஜம்மாள், காரைச் சித்தரின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதினார்.
'கனகவைப்பு' என்னும் நூலைக் காரைச் சித்தர் இயற்றினார். பாலா திரிபுர சுந்தரி வழிபாட்டில் திளைத்தவர். சக்தி உபாசகர்.
1964ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 24ம் நாள் காரைச் சித்தர் மகாசமாதி அடைந்தார். அவரது சமாதி ஆலயம், அவர் வாழ்ந்த விசலூர் கிராமத்தில் உள்ள சாந்தவெளியில், அவர் அமைத்து வழிபட்ட வீர ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
பீடத்தில் காரைச் சித்தரின் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இன்றும் தன்னை வணங்கும், நம்பும் பக்தர்களின் வாழ்க்கைக்குச் சுவாமிகள் வழிகாட்டி உதவுகிறார்.
எனது 7 வயதில் எனக்கு ராம ஷடாக்ஷரி மந்திர உபதேசம் அதன் மந்திர நுட்பம், பீஜ பேத மந்திரங்கள் உபதேசித்தார் என் தாய்வழிப் பாட்டனார் ஊர் திப்பிராஜபுரம் அவர் தங்கி இருந்த சாந்த வெளிக்கு அருகில் எனவே அடிக்கடி பாட்டனாரு டன் வில்வண்டியில் விசலூர் சென்று சாந்தவெளி செல்வேரம் வலங்கைமான் சுற்றிப் போகாமல் செல்லும் வழி இது. ஒரு முறை மாடுகள் இரண்டுக்கும் தண்ணீர் காட்ட வேலையாள் சென்று இருந்தான். எனக்கு வேடிக்கை காட்ட சுவாமிகள் கையை தூக்கினார் சாய்ந்து இருந்த வண்டி நிமிர்ந்தது கையை அசைத்தார மாடு இல்லாமல் கட கட என்று ஓடியது. கையைத் தட்டினார் வண்டி திரும்பி எங்களிடம் வந்து அந்தரத்தில் நின்றது. கையை கீழே இறக்கினார் வண்டி பழையபடி சாய்ந்து நின்றது. இதை கண்கட்டு வித்தை என்று அந்தணர் சிலர் வழக்கம் போல பரிகசித்தனர்.
குற்றம் சொல்வதும் எள்ளி நகையாடுவதும் அவர்கள் ஜீன்களிலேயே ஊறிய பிறப்புரிமை அல்லவா? இவரை மற்றும் ஒரு முறை ராமர் க்ஷேத்ரமான கேரளா திருப்பரயாரில் சந்தித்தேன். காஷாய உடையுடன் அருகில் உள்ள தீவ்ரா நதியில் குளித்தார். ஆடை மாற்றும் இடத்திற்கு ஈரமான உடையுடன் சென்றார் கையில் பெட்டி எதுவும் கொண்டு செல்லவில்லை ஆடை மாற்றி வரும் போது ஒரு ராஜா போல தலைப்பாகை ராஜரீகமான உடைகளுடன் வந்தார் சுவாமி சன்னிதி வழிபட்டவுடன் அந்தப் பட்டு வஸ்திரம் நீல வண்ணம் எனக்கு போர்த்தினார். இன்னும் பூஜையில் வைத்து இருக்கிறேன். கண்கட்டு வித்தை என்றால் உடனே மறைந்து இருக்கும்.
அவருக்கு மிகவும் பிடித்த ராகம் பிரதாபவராளி.
அவரை தரிசிக்கவரும் நாதஸ்வர வித்வான்கள் அதை இசைப்பர் இசை நுட்பம் தெரிந்து ரசிப்பார்.
வலங்கைமான் - குடவாசல் சாலையில் ஆண்டான் கோவிலில் இறங்கி குடமுருட்டி ஆறு தாண்டினால் சாந்தவெளிவரும். பெயருக்கு ஏற்ற அமைதி தவழும் பூமி சோலைகள் நிறைந்தது. குடமுருட்டி முடி கொண்டான் ஆறு கட்கு இடையே அமைந்தது. அவசியம் ஒரு முறை சென்று காரைச் சித்தரை தரிசித்து வாருங்கள்.
காரைச்சித்தர் எனக்கு உபதேசித்த ராம ஷடாக்ஷரி மந்திரம் பின்வருமாறு பொது:
ராம் ராமாய ஸ்வாஹா
கல்வியில் மேன்மை அடைய
ஐம் ராமாய ஸ்வாஹா
உலக வசியம் பெற
க்லீம் ராமாய ஸ்வாஹா
உடல் சக்தி மற்றும் ஆத்ம சக்தி பெற
ஹ்ரீம் ராமாய ஸ்வாஹா.
இவற்றை என் பக்தர்கள் தவறாது ஜபித்து வரவும்
எல்லா நன்மைகளையும் அடையவும் என் குருநாதர் காரைச் சித்தர் பாதம் தொட்டு வேண்டுகிறேன் காரைச்சித்தர் புகழ் ஓங்குக!