தானியத்தின் மீது பணத்தை வைத்து தர விரைவில் கடன் பிரச்னை?
நாம் ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடிய பல பிரச்சினைகளில் மிகவும் முக்கியமான ஒரு பிரச்சினையாக திகழ்வதுதான் கடன் பிரச்சினை. கடன் பிரச்சினை தீருவதற்காக பலவிதமான வழிமுறைகளை மேற்கொண்டு முயற்சிகளை செய்தும் அதனால் எந்த பலனும் இல்லை, கடன் அடையவே இல்லை என்பவர்கள் மறவாமல் செவ்வாய்க்கிழமை வழிபாட்டை செய்வார்கள்.
ஏனென்றால் கடன் தொடர்பான அனைத்து பிரச்சனைக்கும் காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான் என்பதால் தான். அதனால்தான் செவ்வாய்க்கிழமை செவ்வாய் பகவானுக்குரிய அதி தேவதையான முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது விரைவிலேயே கடன் தொடர்பான பிரச்சனை தீரும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட செவ்வாய்க்கிழமை செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் தீர எமகண்ட நேரம் வழிபாடு
கடன் தொடர்பான பிரச்சினைகளாக இருந்தாலும் சரி இடம், வீடு, நிலம் போன்ற மண் சார்ந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி இவை அனைத்திற்கும் காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். இது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் அந்த பிரச்சினைகள் தீர வேண்டும் என்று முழுமனதோடு செவ்வாய் பகவானையும் முருகப்பெருமானையும் செவ்வாய்க்கிழமையில் வழிபாடு செய்யும்பொழுது படிப்படியாக அந்த பிரச்சினைகள் தீரும் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில் கடன் பிரச்சினை தீருவதற்காக செவ்வாய்க்கிழமையில் பலவிதமான பரிகாரங்களை செய்யலாம் என்று கூறப்படுகிறது. அவற்றுள் ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
பொதுவாகவே கடன் விரைவில் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமை கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று கூறி கேள்விப்பட்டிருப்போம். அதுவும் குறிப்பாக குளிகை நேரத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் பொழுது திரும்ப திரும்ப அந்த கடனை செலுத்துவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அதன் மூலம் கடன் பிரச்சினை தீரும் என்றும் கூறியிருப்பார்கள். இவ்வாறு செய்தும் ஒரு சிலருக்கு கடன் பிரச்சினை என்பது தீறாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய ஒரு சூட்சமமான பரிகாரமாக தான் இந்த பரிகாரம் திகழ்கிறது.
செவ்வாய்க்கிழமை குளிகை நேரத்தால் கடன் பிரச்சினை தீரவில்லை என்று நினைப்பவர்கள் அதே செவ்வாய்க்கிழமையில் வரக்கூடிய எமகண்ட நேரத்தை பயன்படுத்தினால் விரைவிலேயே கடன் பிரச்சினை தீரும் என்று கூறப்படுகிறது. கடன் தொடர்பான பிரச்சனைக்கு காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான் என்பதைப் போலவே கேது பகவானும் ஒரு காரணமாகவே திகழ்கிறார். அதனால் கேது பகவானுக்குரிய நேரத்தில் கேது பகவானின் தானியத்தில் பணத்தை வைத்து நாம் திருப்பி செலுத்தும் போது கேதுவால் ஏற்படக்கூடிய தடைகளும் பிரச்சனைகளும் நீங்கி விரைவிலேயே கடனை அடைக்க முடியும்.
எமகண்ட நேரம் என்பது கேது பகவானுக்குரிய நேரமாக கருதப்படுகிறது, தானியமாக திகழ்வது கொள்ளு. செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரம் என்பது காலை 9 மணியிலிருந்து 10:30 மணிக்குள் வரும். அந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனிலிருந்து சிறுத்தொகையாவது திருப்பி செலுத்த வேண்டும். அவ்வாறு திருப்பி செலுத்துவதற்கு முன்பாக ஒரு சிறிய கிண்ணத்தில் கொள்ளை வைத்து அதற்கு மேல் நாம் எந்த பணத்தை கடனை திருப்பித் தருவதற்கு பயன்படுத்துகிறோமோ அந்த பணத்தை வைத்து முழு மனதோடு முருகப்பெருமானை வேண்டிக்கொண்டு பிறகு அந்த பணத்தை எடுத்து கடனை அடைக்க விரைவிலேயே கடன் பிரச்சினை தீரும் என்று கூறப்படுகிறது.
ஒரு வேளை பணத்தை திருப்ப செலுத்த முடியாத நிலையில் கடனை அடைப்பதற்கு போதிய பணவரவு இல்லை ஆனால் இந்த நேரத்தை தவறவிடக்கூடாது என்று நினைப்பவர்கள் ஒரு கவரில் யாருக்கு பணத்தை தர வேண்டும், எவ்வளவு தர வேண்டும் என்பதை எழுதி அதற்குள் அந்த சிறிய தொகையை வைத்து அதை கொள்ளின் மீது வைத்து விட வேண்டும். எப்பொழுது பணத்தை மொத்தமாக சேர்த்து கொடுக்கிறோமோ அப்பொழுது இந்த பணத்தையும் எடுத்து ஒன்றாக சேர்த்து வைத்து கொடுக்கலாம்.
கடன் வாங்கினால் அந்த கடனை திருப்பி செலுத்த வேண்டும். அதற்குரிய முயற்சிகளை செய்ய வேண்டும். எவ்வளவு முயற்சி செய்தும் கடனை திருப்பி செலுத்த இயலவில்லை என்பவர்கள் கடன் தொடர்பான பணத்தை திருப்பி செலுத்தும் பொழுது இந்த ஒரு தானியத்தின் மீது வைத்து கொடுக்க விரைவிலேயே அந்தப் பிரச்சினை தீரும்.