மே மாதம் 2025 - கடகம் ராசி பலன்கள்

may-2025-kadagam-rasi-palangal
மே மாதம் 2025 - கடகம் ராசி பலன்கள்

கடகராசி நண்பர்களே இம்மாதம் வரக்கூடிய
குருபெயர்ச்சி மற்றும் ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம்.

ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்திருந்த குருபகவான் மே 14-ம் தேதி வரக்கூடிய குருபெயரச்சியில் 12-ம் இடமான விரைய ஸ்தானத்துக்கு வருகிறார் 11-ம் இடம் என்பது நன்மைகளை வழங்க்கூடிய இடமாக இருந்ததால் பெரிய பாிப்புகள் இருந்தது இல்லை.

வரக்கூடிய 12ம் இடம் விரையம் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நன்று தேவையின்றி கடன் சுமைகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம் கையிருப்பு பணம் இருந்தால் சொத்து வீடு என ஆதாரமான சொத்துகள் வாங்கிப்போட்டு முதலீடுகளாக மாற்றலாம் .யாரையும் நம்பி பண விவகாரங்களில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நலம்.
தொழில்களுக்காக புதிய முதலீடுகள் போடாதீர்கள் வரக்கூடிய வருமானம் வந்துக்கொண்டே இருக்கும்.
ராகு+கேது பெயர்ச்சியில் 9-ம் இடத்தில் இருந்த ராகு 8-ம் இடத்துக்கு பின்னோக்கி வருகிறார் எட்டாம் இடம் என்பது அஷ்டம ஸ்தானமாக கருதப்படுவதால் வேலையில் பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
 மிகக் கடுமையாக உழைக்க வேண்டிய வரும் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும் பணிச்சுமை காரணமாக நாம் வேலையை விடும் சூழல் கூட உருவாகும் வேலையில் திருப்தி இருக்காது நல்ல பெயர் கிடைக்காது . இது போன்ற நேரங்களில் வேலையை விட்டால் வேறு வேலை கிடைப்பது மிக கடினமாக இருக்கும் அன்னிய மொழி நபர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள் யாருக்கும் ஜாமின் கையெழுத்துக்கள் போடாதீர்கள்.

ராசிக்கு 3-ம் இடத்தில் இருந்து நன்மைகளை வழங்கிவந்த கேது 2-ம் ஸ்தானத்துக்கு வருகிறார்
இரண்டில் கேது மன சோர்வை உண்டாக்கும் சோம்பல் அதிகமாக காணப்படும் உடல் உழைப்பில் நாட்டமின்மை பணத்தை விரையம் செய்வது என நடத்தி வைக்கும் .கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனைகள் தலைத்தூக்கும் நீயா நானா போட்டி உருவாகும் .

ஆன்மீக பயணங்கள் மேற்க்கொள்வீர்கள்.
கடகத்தை பொறுத்த மட்டில் குரு ராகு கேது மூன்று கோள்களும் பெரிய நற்பலன்களை வழங்க மாட்டார்கள் ..

மீதம் இருக்கூடிய கோள்களும் மற்றும் சுய ஜாதகமும் நன்றாக இருந்தால் நல்லதே நடக்கும்.

பரிகாரம்!

வாரம் தோறும் வரக்கூடிய திங்கட்க்கிழமைகளில் நவகிரக சந்திரன் வழிபாடும் வீட்டில் பௌர்ணமி பூஜையும் செய்து வாருங்களில் இவ்வருடத்தில் வரக்கூடிய எதாவது ஒரு பௌர்ணமி திதியன்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யுங்கள் நல்லதே நடக்கும்.