விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு 2025 - துலாம் ராசிபலன்கள்

tamil-new-year-2025-thulam-rasi-palangal
விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு 2025 - துலாம் ராசிபலன்கள்

நிச்சயமாகவே இந்த தமிழ் புத்தாண்டு மிக மாற்றத்தை தரக்கூடிய ஆண்டாக விளங்கும் கடந்த கால கசப்பான நிகழ்வுகளுக்கு இந்த ஆண்டு நற்பலன்கள் மூலமாக நன்மைகளை காண முடியும்.

மார்ச் மாதத்தில் நடைபெற்ற சனி பெயர்ச்சி பலன் ஐந்தாம் இடத்தில் இருந்து ராசிக்கு ஆறாம் இடமான உபஜெய ஸ்தானத்திற்கு வந்திருப்பதால் சனி பகவான் பல நன்மைகளை வாரி வழங்குவார் புதிய தொழில் மூலமாக நல்ல வருமானத்தை பெறுவீர்கள். வழக்குகள் வாபஸ் ஆகும் பங்காளிகளுக்குள் இருந்து வந்த சண்டைகள் முடிவுக்கு வரும் பெரிய மனிதர்கள் உதவிகளும் அவர்களின் ஆதரவும் கிடைக்கும் தைரியம் தன்னம்பிக்கையும் பிறக்கும்.

மே மாதம் வரக்கூடிய குரு பெயர்ச்சி பலன்களில் ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் இருந்த தொல்லைகள் கொடுத்து வந்த குருபகவான் 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு செல்வதால் தொட்ட காரியம் யாவும் வெற்றிகளை தேடி தரும் பண வரவுகள் நன்றாக இருக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் கணவன் மனைவி உறவு பலப்படும் புதிய தொழில் மூலமாக நல்ல லாபத்தை பெறுவீர்கள் கடன்கள் சிறுக சிறுக அடைபடும் கணவன் மனைவி உறவு பலப்படும் பண சேமிப்புகள் உண்டாகும் கொடுத்த பணம் வசூல் ஆகும் .நீண்ட காலமாக இழுபறியில் இருந்துவந்த விவகாரங்கள் முடிவுக்கு வரும்.

ராகு கேது பெயர்ச்சியில் கேது 12ஆம் இடத்தில் இருந்து பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்திற்கு பின்னோக்கி செல்வதால் கேதுவால்  நன்மைகள் உண்டாகும் தேக ஆரோக்கியம் நன்றாக காணப்படும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் தீராத நோய் தீர்ந்துவிடும் நாள்பட்ட நோய்கள் அறுவை சிகிச்சை மூலமாக நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வெளிநாடு வேலை வாய்ப்புகள் உருவாகும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபத்தை தரும்.

இவ்வருடம் ராகுபகவான் மட்டும் சற்று பலவீனமாக 5-ம் இடத்துக்கு வருவதால் சற்று எச்சரிக்கையாக இருக்கவும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனத்தை செலுத்துங்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது புதிய நபர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருங்கள் பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்.

பங்குசந்தை முதலீடுகளில் கவனம் தேவை பெரிய தொகைள் நஷ்டம் அடைய சாத்தியம் உண்டு.

பரிகாரம்!

வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரன் வழிபாடும் அம்பாள் வழிபாடும் செய்து வாருங்கள் பௌர்ணமி விரதம் திருவண்ணாமலை கிரிவலம் நன்மைகளை வாரி வழங்கும் நல்லதே நடக்கும்.