கண் திருஷ்டி விலக வெட்டி வேர் பரிகாரம்?

kan-thirusti-parikaram
கண் திருஷ்டி விலக வெட்டி வேர் பரிகாரம்?

ஒரு வீட்டில் கண் திருஷ்டியும், கெட்ட சக்தியும் நெருங்காமல் இருந்தாலே போதும். அந்த வீட்டில் பணம் காசு தானாக சேர தொடங்கிவிடும். இதற்கு பெரிய அளவில் நாம் எந்த செலவும் செய்ய தேவை கிடையாது. பின் சொல்லக் கூடிய முறைகளை பின்பற்றினாலே போதும். உங்களுடைய வீடு கோவிலாக மாறும். எல்லாருடைய பணக்கஷ்டத்தை போக்க உதவும் இந்த பரிகாரத்தை பற்றிய விரிவான தகவலை தெரிந்துகொள்ள பதிவை தொடர்ந்து படித்து பயனடையுங்கள்.

கண் திருஷ்டிக்கு வெட்டிவேர் பரிகாரம்:

வரவேற்பறையில் ஒரு கண்ணாடி டம்ளரில், தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சமாக வெட்டிவேரை போட வேண்டும். அந்த தண்ணீரில் கொஞ்சமாக பச்சைக் கற்பூரத்தை நுணுக்கி போடுங்கள். ஒரு எலுமிச்சம் பழம், கரும்புள்ளிகள் இல்லாத எலுமிச்சம் பழத்தை அந்த தண்ணீரில் போட்டு, வரவேற்பறையில் வைத்து விடுங்கள். இந்த தண்ணீரை தினமும் மாற்றுங்கள்.

உள்ளே இருக்கும் வெட்டி வேரையும் எலுமிச்சம் பழத்தையும் மூன்று நாளைக்கு ஒருமுறை மாற்றினால் போதும். ஒரு வேலை அந்த எலுமிச்சம் பழம் அழுகிவிட்டால் அதை உடனடியாக வீட்டில் இருந்து வெளியே தூக்கி போட்டுவிட்டு, புது எலுமிச்சம் பழத்தை போடவும். காரணம் வீட்டில் இருக்கும் அந்த எலுமிச்சம் பழம் எதிர்மறை ஆற்றலை தன்னகத்தே ஈர்த்துக் கொண்டது என்று அர்த்தம்.

கண்ணாடி டம்ளரில் மேல் சொன்ன முறைப்படி வரவேற்பு அறையில் தயார் செய்து வைத்துவிட்டால் உங்களுடைய வீட்டிற்குள் யார் பொறாமை குணத்தோடு வந்தாலும் சரி அவர்களுடைய கண்திருஷ்டி உங்களை எதுவுமே செய்யாது. வீட்டில் எதிர்மறையாற்றல் தங்குவதற்கு வாய்ப்பே கிடையாது. நல்லது மட்டுமே வீட்டில் நடக்கும் வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி கோபப்பட்டு கொண்டே இருந்தால் அதை சரி செய்யவும் இந்த பரிகாரம் உங்களுக்கு கைகொடுக்கும். வெட்டிவேர் வாசம் பச்சைக் கற்பூரவாசம் இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியவை தான்.

அடுத்தபடியாக பூஜை அறைக்கு வருவோம். ஒரு மண் அகல் விளக்கில் சுத்தமான நெய் ஊற்றி விடுங்கள். அதில் வெட்டிவேரை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி போடவும். பிறகு விளக்கு ஏற்றும் திரியோடு ஒரு வெட்டிவேரை வைத்து திரித்து, இந்த திரியை அந்த மண் அகல் விளக்கில் போட்டு விளக்கு ஏற்றி விடுங்கள். இதனுடைய வாசம் அப்படியே காற்றோடு காற்றாக கலக்கும்.

இந்த வாசம் மகாலட்சுமிக்கு ரொம்ப பிடிக்கும். வெட்டிவேர் வெற்றியை கொடுக்கும் வேர். உங்களுடைய வீட்டில் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிக்கும் வெற்றியை தரக்கூடிய சக்தி இந்த தீபத்திற்கு உண்டு. வீட்டில் வறுமை என்ற இருள் தங்காமல் இருக்க வாரத்தில் ஒரு நாள் இந்த விளக்கை ஏற்றலாம், அல்லது செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை இரண்டு நாட்கள் இந்த விளக்கை ஏற்றும் போது உங்களை அறியாமல் உங்கள் வீட்டிற்குள் மன நிம்மதியை உணருவிங்க. நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறவும்.