சிம்மம் - ஆங்கில புத்தாண்டு 2025 ராசி பலன்கள் பரிகாரங்கள்

simmam-new-year-2025-rasi-palangal-poojai-remedy
சிம்மம் - ஆங்கில புத்தாண்டு 2025 ராசி பலன்கள் பரிகாரங்கள்

2025 ஆம் ஆண்டு ராசி பலன்கள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம் சிம்ம ராசியின் அதிபதி சூரியன் என்பதால் எப்பொழுதும் தலைமை பதவியை நாடியை மனம் செல்லும் அதற்காக அடித்தளம் அமைத்துக் கொள்வதில் ஆர்வம் அதிகமாக காணப்படும் அரியணையின் அடையாளமே சிம்மாசனம் என்பதால் அரசியல் மற்றும் அரசாங்க உயர் பொறுப்புகளில் சிம்ம ராசிகள் அதிகம் இருப்பார்கள் எப்பொழுதும் முதன்மையான ஸ்தானத்திலும் கம்பீரமாகவும் இருக்கவே விரும்புவார்கள் பெற்ற பிள்ளைகளை போல மற்ற பிள்ளைகளைளிடமும் அதிக பாசம் செலுத்துவார்கள் இவர்களை புகழ்ந்து பேசினால் காரியம் சாதித்துக் கொள்ளலாம்.

முகஸ்துதி அதிகமாக விரும்பக் கூடியவர்கள் அதே நேரம் மற்றொருவருடைய புகழையும் பெருமையும் எளிதாக அங்கீகரிக்க மாட்டார்கள் இவர்கள் பேச்சில் எப்பொழுதும் ஒரு தெளிவு இருக்கும்.

2025 புத்தாண்டு கடந்த ஆண்டை போலவே காணப்பட்டாலும் 10 5 25 ஆம் ஆண்டில் நடைபெறக்கூடிய குரு பெயர்ச்சியானது உங்கள் ராசிக்கு மிகப்பெரும் பலத்தை தருவார் பத்தாம் வீட்டில் அமர்ந்து சில நஷ்டங்களையும் கஷ்டங்களையும் தந்து கொண்டிருந்த குரு பகவான் ராசிக்கு 11 ஆம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருகிறார் பொதுவாகவே குரு பகவான் 2,5,7,9,மற்றும் 11 ஆம் இடங்களை குரு பலன் என அழைக்கப்படுவார்கள் அந்த இடங்களில் நற்பலன்களை வாரி வழங்குவார். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும் தடைபட்ட குழந்தை பாக்கியம் தடையின்றி கிடைக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் லாபகரமாக அமையும் புதிய தொழில்கள் மூலமாக நல்ல லாபத்தை பெற முடியும் பண சேமிப்புகள் இருக்கும் கடன் சுமைகள் சிறுக சிறுக குறையும் பண சேமிப்பில் ஆர்வம் பிறக்கும்.

ஏழாம் இடமான கண்டக ஸ்தானத்தில் அமர்ந்திருந்த சனி பகவான் தற்சமயம் அஷ்டம ஸ்தானத்துக்கு செல்கிறார் சனி பகவானுக்கு 7-ம் இடம் 8-ம் இடம் என்பது தீய பலன்களை தரக்கூடிய இடங்கள் ஆகும் அவ்வகையில் மார்ச் மாசம் வரக்கூடிய சனி பெயர்ச்சியானது பெரிய பலன்களை வழங்காது அஷ்டம ஸ்தானத்திற்கு வரக்கூடிய சனி பகவான் சில நஷ்டங்களையும் கஷ்டங்களையும் உண்டு பண்ணுவார், தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிட வேண்டாம் வீடு மனை நிலங்கள் வாங்கும் பொழுது பத்திரப்பதிவுகளில் கவனம் செலுத்தவும் உணவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள் சொத்து பிரச்சனைகள் வரக்கூடும் பங்காளிகளுக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள் ஜாமீன் கையெழுத்துகள் போட வேண்டாம்.

2-ம் இடத்தில் அமர்ந்திருந்த கேது மே மாதம் 18ஆம் தேதி வரக்கூடிய ராகு +கேது  பெயர்ச்சியில் கேது பின்னோக்கி சஞ்சாரம் செய்து ராசிக்குள் வருகிறார் ராசிக்குள் கேது நுழையும் காலகட்டம் மன குழப்பங்கள் அதிகமாக காணப்படும் யாரை  நம்புவது என மனம் பதை பதைக்கும். தேவையில்லாத பிரச்சனைகள் சிக்கிக் கொள்வீர்கள் கணவன் மனைவிக்குள் ஈகோ  தலை தூக்கும் நீயா நானா என போட்டி நடக்கும்.பனிபோர்கள் உருவாகும் வீண் செலவுகளால் கையிருப்பு குறையும் ஆன்மீகப் பயணங்கள் மேலோங்கும் கோயில் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள் சுப விரையங்கள் உண்டாகும்.

அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்த ராகு பகவான் ஏழாம் இடத்திற்கு வருகிறார் இதனால் குடும்ப உறவு முறைக்குள் மன ஸ்தாபங்களும் மனக்கசப்புகளும் வரக்கூடும் உடல் நலக்குறைபாடுகள் தோன்றும் மருத்துவ விரைய செலவுகள் உண்டாகும்.

வேலையில் இருக்கும் சிலருக்கு வேலைகள் பறிபோகும் வாய்பும் உள்ளது புதிய வேலைகள் தேட வேண்டிய சூழல் உருவாகும் வெளிநாட்டில் பணிபுரிவார்கள் பணிச்சுமை அதிகமாக காணப்படும் பணிசுமை காரணமாக வேலையை விட்டு விடாதீர்கள் அப்படியே விட்டாலும் அடுத்த நல்ல வேலை கிடைக்க போராட வேண்டி வரும் பங்குச்சந்தை டிரேடிங் ஸ்டாக்  மார்க்கெட் போன்ற ஆன்லைன் வருத்தங்கள் தவிர்க்கவும் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகும் பண முதலீடுகளில் மிக கவனம் தேவை தனியார் நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்யாதீர்கள் ஏமாற்றப்டுவீர்கள் கவனம்.

பெண்களுக்கு!
மே மாதம் வரை கஷ்டங்களை சந்தித்தாலும் வரக்கூடிய குரு பெயர்ச்சி உங்களுக்கு உற்சாகத்தை தரும் மன மகிழ்ச்சி உண்டாகும் கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும் ஆடம்பர செலவுகளை தவிற்கவும்.

உத்தியோகஸ்த்தர்களுக்கு!
வேலையில் பணிச்சுமை அதிக அளவில் காணப்படும்.
மேல் அதிகாரிகளிடம் கெட்ட பெயர் வாங்குவீர்கள்
வெளியூர் பயணங்களால் மன உளச்சல் உண்டாகும்.

மாணவர்களுக்கு!
படிப்பில் கவனம் செலுத்தவும்
அதிகாலை நேரமான பிரம்ம முகூர்த்த நேரத்தில் படிக்க தொடங்குங்கள் இந்த கல்வி ஆண்டில் நல்ல மதிப்பெண்கள் பெற கடுமையாக போராட வேண்டிவரும்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன் ஆலயத்தில் உள்ள நவகிரக சூரியன் வழிபாடும்.

பிரதோஷ தினத்தன்று அர்ச்சனையும் செய்து வாருங்கள்.
இவ்வருடத்தில் வரக்கூடிய எதாவது ஒரு பௌர்ணமி திதியன்று திருவண்ணாமலை கிரிவலம் சென்று வாருங்கள்.

நல்லதே நடக்கும்.