ஜாதகத்தை உண்மையில் நம்பலாமா?
மந்திரம் பொய்யானால் பாம்பை பாரு
மருந்து பொய்யானால் வானம் பாரு
சாத்திரம் பொய்யானால் கிரகணம் பாரு
சாமிதான் பொய்யானால் சாணம் பாரு
இதன் பொருள், பாம்புக்கு கேட்கும் செவிகள் (காது) கிடையாது. ஆனால் மணி மந்திரம் என்னும் மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது அது அசையாமால் ஒரே இடத்தில் நின்று கவனிக்குமாம்.
மருந்து நிரப்ப பட்ட பட்டாசை பற்ற வைத்தால் வானத்தில் சென்று அது பல வண்ணமாக வான வேடிக்கை காட்டுகிறது. எனவே மருந்து நிரப்ப பட்ட பட்டாசு பொய்யல்ல. நாம் அதனை கண்ணால் காண்கிறோம். வியக்கிறோம். அது போல ஜோதிட சாஸ்திரத்தில் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் என்று பல மாதங்களுக்கு முன்பே கணிக்கப்பட்டு எழுதப்பட்ட பஞ்சாங்கத்தில் உள்ள அதே நாளில் அதே நேரத்தில் கிரகணம் நிகழ்கிறது. அதனை நாம் இன்று தொலைகாட்சி வாயிலாக நேரலையில் காண்கிறோம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் முந்தைய காலகட்டத்தில் சமையல் செய்யும் மண் அடுப்பை செய்வதற்கு முன் பசுமாட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து அதன் பின்னர் தான் அந்த அடுப்பு செய்ய துவங்குவார்கள். ஆனால் பல நாட்கள் ஆன பின்பும் அந்த சாணத்தால் செய்த அந்த பிள்ளையர் சிதையாமல் அப்படியே இருக்கும். ஆனால் இந்த பூமி எல்லா பொருட்களையும் சிதைத்து அழித்து விடுகிறது. புதைக்கப்பட்ட மனித உடலையும் கூட.
எனவே உங்கள் கேள்விக்கு வருவோம். ஜாதகத்தை நம்பலாமா? என்பதற்கு பதிலாக ஜோதிடத்தை நம்பலாமா? என்று கேள்வி கேட்டு இருந்திருந்தால் நன்றாக இருக்கும். இந்த உலகமே ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் தான் சுழன்று கொண்டு இருக்கிறது. இதை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் அவரவர் விருப்பம்.