இந்த பொருளை தலையை சுற்றி போட்டால் கண் திருஷ்டி?
இந்த பொருளை தலையை சுற்றி போட்டால், உங்கள் உடம்பை பிடித்த எதிர்மறை சக்தி கண் திருஷ்டி அனைத்தும் விலகும்.
வாரம் ஒரு முறையோ, அல்லது மாதத்தில் இரண்டு முறையோ கண் திருஷ்டி கழிக்கும் வழக்கம் ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். நம்மை சுற்றி எந்த அளவுக்கு நல்ல சக்திகள் இருக்கிறதோ, அதை அளவுக்கு கெட்ட சக்திகளும் இருப்பது உண்மைதான். அந்த வகையில் நம்முடைய முன்னேற்றத்தை பார்த்து பொறாமைப்படுபவர்களுடைய எண்ணங்கள், கண் திருஷ்டியாக மாறி நம்மை சுற்றி, ஒரு படலமாக படிந்து விடும்.
அப்போது நம்முடைய ஆரா சிறப்பாக செயல்படுவதை குறைத்து விடும். சோம்பேறித்தனம், தூக்கம், ஒரு வேலையைகூட சரியாக செய்ய முடியாது. கொட்டாவி கொட்டாவி ஆக வரும். உடல் அடித்துப் போட்டது போல இருக்கும். வேலையை கடமைகளை சரியாக செய்யாமல் போனால் வேலையில் வீழ்ச்சி தொழிலில் வீழ்ச்சி ஏற்படும்.
இந்த மாதிரி சூழ்நிலையில் இருந்து உங்களை பாதுகாக்க வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால், வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் திருஷ்டி சுற்றி போடுங்கள். திருஷ்டி சுற்றி கழிப்பதில் மிக மிக எளிமையான சக்தி வாய்ந்த ஒரு முறையைத்தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
இன்று ஆவணி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை. நாளை சூரியனுக்கு உகந்த இந்த தினத்தில் திருஷ்டி சுற்றி போட்டுக் கொள்வது குடும்பத்திற்கு நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளிக்கின்ற தண்ணீரில் கல்லுப்பு போட்டு குளிக்கலாம். சின்ன குழந்தைகளுக்கு குளிப்பாட்டும் போது, அதாவது 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை குளிப்பாட்டும் போது தண்ணீரில் கொஞ்சமாக கல்லுப்பை, பெற்றவர்கள் போட்டு கலந்து குளிப்பாட்டி விடுங்கள்.
10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களுடைய கையாலே உப்பை எடுத்து தண்ணீரில் போட்டு, அந்த தண்ணீரில் குளித்துக் கொள்ளலாம் தவறு கிடையாது. கல் உப்பு கலந்த தண்ணீரில் குளித்தால் கடல் நீரில் குளித்த பலனை பெற முடியும். நாளை இரவு 9:00 மணிக்கு மேல் 1 கைப்பிடி கல்லுப்பு, 1 கைப்பிடி கடுகு இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். சமையலுக்கு பயன்படுத்தும் கடுகு தான்.
இந்த இரண்டையும் ஒரு வெள்ளை காகிதத்தில் வைத்து மடித்துக் கொள்ளுங்கள். கீழே சிந்தாமல் இருக்கும். இந்த பொட்டலத்தை வீட்டில் இருப்பவர்கள் அனைவருடைய தலையையும் 3 முறை சுற்ற வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொட்டலங்கள் இதே போல தயாரித்து செய்து கொள்ளலாம்.
உங்களுக்கு நீங்களே இதை தலையை சுற்றிக்கொண்டாலும் சரி, அல்லது உங்களுடைய பிள்ளைகளுக்கு கணவருக்கு இந்த பொட்டலத்தை கொண்டு தலையை மூன்று முறை சுற்றி நாளும் சரி, அல்லது வீட்டில் பாட்டி இருந்தால் அந்தப் பாட்டி அனைவருக்கும் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. எல்லா பொட்டலங்களையும் தலையை சுற்றி ஒரு கவருக்குள் போட்டுக் கொள்ளுங்கள்.
திருஷ்டி கழித்த இந்த பொட்டலங்களை அப்படியே வீட்டில் வெளி பக்கத்தில் ஓரமாக எங்கேயாவது எடுத்து வைத்து விடுங்கள். திங்கட்கிழமை காலை எழுந்து வீட்டில் இருக்கும் யாராவது ஒருவர், இந்த பொட்டலத்தை கொண்டு போய் ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் நீர் நிலைகளில் கொண்டு போய் போட வேண்டும்.
ஆறு குளம் ஏரி கிணறு எதுவாக இருந்தாலும் தண்ணீரில் இந்த பொட்டலத்தை போடலாம். வாரம் ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்து வந்தால் உங்களை பிடித்த எதிர்மறை ஆற்றல் விலகும். உங்களை சுற்றி எப்போதும் நேர்மறையான ஆரா இயங்கும். கண் திருஷ்டி விலகி உங்கள் முன்னேற்றத்திற்கு உண்டான தடைகள் விலகி, குடும்பத்தில் நல்லது நடக்க தொடங்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறவும்.