காலில் விழுந்து கதறிய வாட்ச்மேன்.. அன்பில் மகேஷ் கைது - தமிழிசை ஆவேசம்.
இன்றைய ராசி பலன்கள் - (27-10-2026 செவ்வாய் கிழமை)
மேஷம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். உத்யோகத்தில் பதவிகள் தேடி வரும்.
ரிஷபம்
பணவரவு ஓரளவு திருப்தி தரும். சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகம் ஏற்படும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
மிதுனம்
கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படும். எதிர்காலம் குறித்த யோசனை அதிகமாகும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
கடகம்
உங்கள் சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம். உடல் நலம் மேன்மை தரும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. உத்யோக மாற்றம் ஏற்படும்.
சிம்மம்
மனதிற்கு இதமான செய்தி வரும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கன்னி
உறவினர்களால் சில தொந்தரவுகள் வரும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். புது வீடு, மனை வாங்குவது, குறித்த யோசனை வரும். உத்யோகத்தில் பெயர், புகழ் ஓங்கும்.
சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
துலாம்
குடும்ப பிரச்சனை முற்றிலும் தீரும். யாரிடத்திலும் வீண் வம்பு, வாதம் செய்ய வேண்டாம். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
விருச்சிகம்
குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். வேண்டிவர்களுக்காக சில செலவுகளை செய்ய வேண்டிவரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். தொழில் நிலை சிறப்பாக இருக்கும்.
தனுசு
குடும்பத்தில் செலவுகள் கூடும். நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
மகரம்
மனதில் ஏற்பட்ட பயம் நீங்கும். நண்பர்கள் தக்க நேரத்தில் உதவி செய்வர். அனாவசிய செலவுகளை குறைத்து கொள்ளவும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.
கும்பம்
திட்டமிட்ட செயல்கள் ஒன்றின் பின் ஒன்றாக நடக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி பொங்கும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மீனம்
குடும்ப ஒற்றுமை பலப்படும். முக்கிய நேரங்களில் அனுபவ அறிவை வெளிப்படுத்தவும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பர். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.