நடிகர் சந்தானம் நடித்த காட்சிகள்.. கோடிகளை கொடுத்து காட்சிகள் நீக்கிய சன் பிக்ச்சர்ஸ்!.
தனுஷ் - ஐஸ்வர்யாவை மீண்டும் சேர்த்து வைத்த அனிருத் திருமணம்?
தனுஷும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இரண்டு மகன்களையும் பெற்ற அவர்கள்; சில வருடங்களுக்கு முன்பு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றார்கள். சூழல் இப்படி இருக்க அவர்கள் இரண்டு பேரும் மீண்டும் சேரும் சூழ்நிலை உருவாகியிருப்பதாக பேச்சுக்கள் வருகின்றன. அது தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. காதல் கொண்டேன் திரைப்பட சமயத்தில் தனுஷுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் இரண்டு பேருக்குமே காதலாக மாறியது. இந்தக் காதலுக்கு முதலில் ரஜினியின் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. ஆனால் தான் செய்யும் காதலில் மகள் உறுதியாக இருப்பதை பார்த்து திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார். லதாவும் மகளுக்காகத்தான் அந்தத் திருமணத்துக்கு ஓகே சொன்னதாகவும் ஒரு பேச்சு உண்டு.
நலமான இல்லறம்: திருமணத்துக்கு பின்பு தனுஷும் ஐஸ்வர்யாவும் கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்தார்கள். அவர்களுக்கு மொத்தம் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க திடீரென அவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டது. எல்லா ஜோடிகளுக்குள்ளும் வரும் சண்டை மாதிரிதான் இதுவும் என்று குடும்பத்தினர் நினைத்தார்கள். முக்கியமாக காலப்போக்கில் சரியாகிவிடும் என்றும் கருதினார்கள்.
ரஜினியின் முயற்சி: ஆனால் அது சரியாகாமல் நீண்டுகொண்டே சென்றதால்; இரண்டு பேரும் சட்டப்பூர்வமாக பிரிய முடிவெடுத்து அதன்படி பிரிந்தும் விட்டார்கள். இதற்கிடையே அவர்களை சேர்த்து வைத்திட வேண்டும் என்பதில் ரஜினியும் தீவிரமாக முயற்சித்ததாகவும்; அந்த முயற்சிக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்று இரண்டு தரப்புக்கும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. பிரிந்த பிறகு அவர்கள் தங்களது கரியரில் கவனம் செலுத்திவருகிறார்கள்.
ஜெயிலர் 2வில் ஒன்றாக: ஐஸ்வர்யாவை பிரிந்தாலும் ரஜினி மீது தனுஷுக்கு இருக்கும் பாசமும், மரியாதையும் கொஞ்சம்கூட குறையவில்லை. ரஜினியின் பிறந்தநாளுக்கு தவறாமல் வாழ்த்து சொல்லும் தனுஷ்; சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 படத்தின் முதல் நாள் முதல் காட்சியையும் பார்த்தார். அப்போது ஐஸ்வர்யாவும் தனுஷ் அமர்ந்திருந்த வரிசையிலேயே அமர்ந்திருந்தார். இதன் காரணமாக அவர்கள் சேர்ந்துவிட்டார்களோ என்ற கேள்வியும் எல்லோரிடமும் எழுந்தது.
ரஜினியின் ஆசி?: அதுமட்டுமின்றி தனுஷ் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் மூடில் இருக்கிறார். அதற்கு ரஜினியின் ஆசீர்வாதமும் முழுக்க முழுக்க இருப்பதாகவே கருதப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க இசையமைப்பாளர் அனிருத் அடுத்த மாதம் 11ஆம் தேதி தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். 21ஆம் தேதி பிரமாண்டமான முறையில் ரிசப்ஷனும் இருக்கிறது. அதில் ஏகப்பட்ட விவிஐபிக்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது.
தனுஷும், ஐஸ்வர்யாவும்: இந்நிலையில் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேரும் மனநிலைக்கு வந்திருக்கிறார்களாம். அநேகமாக அனிருத் - காவ்யா திருமணத்துக்கு இந்த ஜோடி ஒன்றாக வருவதற்கு வாய்ப்புகளும் இருக்கின்றனவான். இந்த பிரிவு காலத்தில் ரஜினியை தனுஷ் அடிக்கடி சந்தித்ததாகவும்; அப்போது தனது மனநிலையில் அவர் மாற்றத்தை கொண்டு வந்ததாகவும் கூறுகிறார்கள் திரைத்துறையினர். ஆகமொத்தம் தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்வதற்கு அனிருத்தின் திருமணம் விதை போட்டிருக்கிறது என்று ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துவருகிறார்கள்.