தனுசு - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026
டிசம்பர் 5, 2026, கார்த்திகை 19-ம் தேதி சனிக்கிழமை இரவு 10:32 மணிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கக் கணிப்புப்படி ராகு+கேது பெயர்ச்சி நிகழ்கிறது.
இடம் மாற்றம்: ராகு கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு (அவிட்டம் 3-ம் பாதத்திலிருந்து 2-ம் பாதத்திற்கு) பெயர்ற்சியாகிறார்.
கேது பெயர்ச்சி: கேது சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கு (மகம் 1-ம் பாதத்திலிருந்து ஆயில்யம் 4-ம் பாதத்திற்கு) பெயர்ச்சியாகிறார்.
கால அளவு: ராகு-கேது மாற்றங்கள் சுமார் 18 மாதங்களுக்கு ஒருமுறை நிகழ்வதாகும்.
தனுசு - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026
இதுவரை ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருந்து ராகு இரண்டாம் இடத்திற்கும் 9-ம் இடத்திலிருந்து கேது 8-ம் இடத்திற்கும் இடப்பெயர்ச்சி ஆகிறார்கள்.
ராகுவுக்கு 2-ம் இடம் என்பது சிறப்பான இடம் அல்ல இரண்டாம் இடம் என்பது தனம்,குடும்ப ஸ்தானமாக கருதப்படுவதால் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனத்தை செலுத்தவும், பணவரவு நன்றாக இருக்கும், வரவுக்கு ஏற்ப செலவுகளும் உண்டாகும் பழைய வாகனங்கள் மாற்ற வேண்டிய சூழல் உருவாகும் வேலையில் பணிச்சுமை அதிகமாக காணப்படும், பணியிடை மாற்றங்கள் எதுவும் செய்ய வேண்டாம் கணவன் மனைவிக்குள் தேவையில்லாத மனக்கசப்புகள் உருவாகும் வீண் விவாதங்கள் தவிர்க்கவும்.
அஷ்டமஸ்தானமான 8-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் அடிக்கடி கோயில் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள் உணவு விஷயங்களில் கவனமாக இருக்கவும் கண்ட கண்ட உணவுகளை உண்ண வேண்டாம் நண்பர்களிடமும் மற்றும் புதிய மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனத்தை செலுத்தவும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட்டு விடாதீர்கள் கோச்சார பலன் என்பது பொதுப்பலன் என்பதால் ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரக நிலைகளும் தசா புத்திகளமே நம்மை வழி நடத்தும் அதனால் பொது பலன்களை கண்டு அஞ்ச வேண்டாம்.
பரிகாரம்:
அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்கு வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் சென்று வழிபாடு செய்து வரவும் வருடத்தில் ஏதாவது ஒரு அமாவாசை திதியன்று குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்