துலாம் - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026

thulam-ragu-kethu-peyarchi-palangal-2026
துலாம் - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026

டிசம்பர் 5, 2026, கார்த்திகை 19-ம் தேதி சனிக்கிழமை இரவு 10:32 மணிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கக் கணிப்புப்படி ராகு+கேது பெயர்ச்சி நிகழ்கிறது.

இடம் மாற்றம்: ராகு கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு (அவிட்டம் 3-ம் பாதத்திலிருந்து 2-ம் பாதத்திற்கு) பெயர்ற்சியாகிறார்.

கேது பெயர்ச்சி: கேது சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கு (மகம் 1-ம் பாதத்திலிருந்து ஆயில்யம் 4-ம் பாதத்திற்கு) பெயர்ச்சியாகிறார்.
கால அளவு: ராகு-கேது மாற்றங்கள் சுமார் 18 மாதங்களுக்கு ஒருமுறை நிகழ்வதாகும்.

துலாம் - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026

இதுவரை ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்த ராகு நான்காம் இடத்திற்கும் பதினொன்றாம் இடத்தில் இருந்த கேது பத்தாம் இடத்திற்கும் பின்னோக்கி செல்கிறார்கள்.

கேதுபகவான் 10-ம் இடத்தில் அமர்ந்து நற்பலன்களை வாரி வழங்குவார் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் கடன் சுமைகள் சிறுக சிறுக குறையும்.

புதிய வாகன யோகம் உண்டாகும் கொடுத்த பணம் வசூல் ஆகும் ஓய்வூதிய பணங்கள் திடீரென கைக்கு வந்து சேரும் கூட்டு தொழில்கள் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் தொழில் விரிவாக்கம் செய்வீர்கள்.

ராசிக்கு 5-ம் இடத்தில் அமர்ந்த ராகு 4-ம் இடத்திற்கு வருகிறார் 4-ம் இடம் என்பது மாதுர் ஸ்தானம், சுக ஸ்தானம், என்பதால் சோம்பல் அதிக அளவில் காணப்படும், எந்த ஒரு வேலையாக இருந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவீர்கள் தாயாரின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும், மருத்துவ செலவுகள் உண்டாகும் புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் யாரையும் நம்பி விடாதீர்கள், பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனத்தை செலுத்தவும், வேலையில் பணிச்சுமை அதிகமாக காணப்படும் பணியிடை மாற்றங்கள் எதுவும் செய்ய வேண்டாம்.

பரிகாரம்:
வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு செய்து வரவும் அமாவாசை திதியில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவதால் மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவும் புத்துணர்ச்சியும் பெறுவீர்கள் நல்லதே நடக்கும்.