இன்றைய ராசி பலன்கள் - (01-09-2026 செவ்வாய் கிழமை)
மேஷம்
மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தை சிறப்பாக வழி நடத்த முடியும். பெற்றோர்கள் அரவணைப்பு கிட்டும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
ரிஷபம்
உங்கள் தனித்திறன் மேம்படும். மனம் தெளிவு பெரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.
மிதுனம்
குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. வாழ்க்கைத்துணை மூலம் பாக்கியங்கள் கிட்டும். சொந்த தொழில் விருத்தி பெரும்
கடகம்
விலகி சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்து இணைவர். வசதி வாய்ப்புகள் பெரும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
சிம்மம்
விட்டு கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவும். வீடு மாற வேண்டிய சூழல் வரும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கன்னி
மனதிற்கு இதமான செய்தி வரும். பயணங்கள் தள்ளி போகும். பொழுதுபோக்கு, ஆடம்பரங்களுக்கு அதிக செலவழிக்க வேண்டாம். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவை.
துலாம்
ஆன்மீக நாட்டம் கூடும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் செல்வாக்கு உயரும்.
விருச்சிகம்
புதிய முயற்சிகள் பலிதமாகும். பெற்றோர்கள் அன்பை புரிந்துகொள்ள முடியும். வீட்டில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு
தனுசு
சொந்த பிரச்சனைக்கு சுமூக பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு கிடைக்கும். உடல் சோர்வு நீங்கும். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி நிலவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
மகரம்
பொருளாதாரம் நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் முடிவடையும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். உத்யோத்தில் உயர்வு நிலை உண்டு
கும்பம்
இஷ்ட தெய்வ வழிபாடு சிறக்கும். பல விதத்திலும் சுகமும் சந்தோஷமும் கிடைக்கும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
மீனம்
குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வழியில் சில பிரச்சனைகள் வரும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.