மனைவிக்கு மகன்கள் திதி கொடுக்கலாமா?
வயிற்றில் பிறந்த வாரிசு இருக்கும்போது மனைவிக்கு கணவன் திதி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தாலி கட்டிய கணவனை விட பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைக்குத்தான் கர்ம அதிகாரம் உண்டு என்று சாஸ்திரம் அறுதியிட்டுச் சொல்கிறது.
ஒரு தாய்க்கு அவர் பெற்ற பிள்ளைதான் கர்மாவினைச் செய்ய வேண்டுமே தவிர, தாலி கட்டிய கணவன் அல்ல. வாரிசு யாரும் இல்லாத பட்சத்தில்தான் மனைவிக்கு கணவன் கர்மாவினைச் செய்ய முடியும். இறந்தவர்களின் வாரிசு உயிருடன் இருக்கும்போது, அவர்களுக்குத்தான் முழு கர்ம அதிகாரமும் சென்று சேரும்.
மகன்களுக்குத்தான் முழு உரிமையும் என்பதால் அவர்கள்தான் தம் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையினைச் செய்ய வேண்டும்.அப்பொழுதுதான் வம்சம் தழைக்கும்.