தமிழ்ப் புத்தாண்டு 2026 - மீனம் ராசி பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு வசந்த ருது-பராபவ வருடம். செவ்வாய்க்கிழமையில் சதயம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.
சதய நட்சத்திரம் ராகுவின் சாரத்தில் இருப்பதால் ராகு வெளிநாடுகளை குறிப்பதாலும் செவ்வாய் போருக்கு காரகம் என்பதாலும் வெளிநாடுகளில் அடிக்கடி உரிமை போர்களும் ஆர்பாட்டங்களும் நடக்கும். பெரிய பேரழிவுகள் உண்டாகாது.
உணவு தானியங்கள் விவசாயம் தழைத்தோங்கும். மக்களிடம் பொருளாதார முன்னேற்றம் கணப்படும் ஆடம்பர பொருட்கள் மீது மக்களுக்கு ஆசை அதிகரிக்கும். தனி நபர் கடன்கள் அதிகமாகும். விஞ்ஞான வளர்ச்சி அபரிதமாகும். தொழில் வளம் பெருகும் புதிய வேலை வாய்புகள் உருவாகும்.
ஏற்றமதி இறக்குமதி சிறப்படையும்.
உங்கள் ராசிக்கு சனிபகவான் ஜென்மத்துக்குள் இருந்து சில தொல்லைகளை தந்தாலும் சுப விரைய செலவுகளால் மன அமைதி கிடைக்கும். யாரிடமும் வம்பு வைத்து கொள்ளாதீர்கள் பண விவகாரங்களில் கவனம் தேவை.
யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட வேண்டாம். 4-ம் இடத்தில் இருக்கும் குரு பகவதால் பெரிய நன்மைகளை வழங்க விடாவிட்டாலும் பெரிதாக பாதிப்புகளை தர மாட்டார்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள் தேவையில்லாமல் கடன் சுமைகளுக்குள் சிக்கிக் கொள்ள வேண்டாம் கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்களும் கருத்து வேறுபாடுகளும் வரக்கூடும் கவனம்.
வருகின்ற ஜூன் 2ம் தேதி நடைபெறக்கூடிய குருபெயர்ச்சியில். 5ம் இடத்தில் அற்புத பலன்களை வழங்குவார். திருமண சுபகாரியங்கள் நடக்கும்
கடன் சுமைகள் குறையும். பண சேமிப்புகள் உண்டாகும்.
ராகு 12-ம் இடத்தில் அமர்ந்திப்பதால் இதனால் சில விரயங்கள் உண்டாகும் வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும் அன்னிய மொழிக்காரர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள் பங்குச்சந்தை டிரேடிங் ஆன்லைன் வியாபாரத்தில் மிகுந்த கவனம் தேவை பண இழப்புகள் வரக்கூடும் .
டிசம்பர் மாதம் 5-ம் தேதி நடைபெறக்கூடிய ராகு + கேது பெயர்ச்சியில் ராகு 12-ம் இடத்தில் இருந்து 11-ம் இடமான லாபஸ்தானத்துக்கு பின்னோக்கி சென்று நற்பலனை வழங்குவார்.
புதிய தொழில்கள் மூலமாக நல்ல லாபம் பெறுவீர்கள்.மருத்துவ செலவுகள் கட்டுக்குள் வரும். கேது ராசிக்கு 6-ம் இடமான உப ஜெய ஸ்தானத்தில் அமர்ந்து நற்பலன்களை வழங்குவார். ஆன்மீக எண்ங்கள் மேலோங்கும்.
தொழில் போட்டிகள் குறையும். டிசம்பர் 5-ம் தேதி கேது 5-ம் இடத்தில் அமர்ந்து மனக்குழப்பங்களை உண்டு பண்ணுவார் பண விவாகரங்களில் கவனம் தேவை. ஒரு கோள் தீய பலனை தந்தாலும் ஏதாவது ஒரு கோள் நற்பலனை கண்டிப்பாக வழங்குவார். மனதில் தைரியம் தன்னம்பிக்கை வளர்த்து கொள்ளுங்கள் தடைகள் விலகும் வெற்றி வசப்படும்.
பரிகாரம்:
சனிக்கிழமைகளில் சனிபகவான் வழிபாடும் பெருமாளுக்கு அர்ச்சனையும் செய்து வாருங்கள். இயலாதவர்களுக்கு உணவு வழங்குங்கள் கால்நடைகளுக்கு தீவனம் தாருங்கள் நல்லதே நடக்கும்.