தமிழ்ப் புத்தாண்டு 2026 - மகரம் ராசி பலன்கள்

tamil-new-year-2026-magaram-rasi-palangal
தமிழ்ப் புத்தாண்டு 2026 - மகரம் ராசி பலன்கள்

தமிழ்ப் புத்தாண்டு வசந்த ருது-பராபவ வருடம். செவ்வாய்க்கிழமையில் சதயம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.

சதய நட்சத்திரம் ராகுவின் சாரத்தில் இருப்பதால் ராகு வெளிநாடுகளை குறிப்பதாலும் செவ்வாய் போருக்கு காரகம் என்பதாலும் வெளிநாடுகளில் அடிக்கடி உரிமை போர்களும் ஆர்பாட்டங்களும் நடக்கும். பெரிய பேரழிவுகள் உண்டாகாது.

உணவு தானியங்கள் விவசாயம் தழைத்தோங்கும். மக்களிடம் பொருளாதார முன்னேற்றம் கணப்படும் ஆடம்பர பொருட்கள் மீது மக்களுக்கு ஆசை அதிகரிக்கும். தனி நபர் கடன்கள் அதிகமாகும். விஞ்ஞான வளர்ச்சி அபரிதமாகும். தொழில் வளம் பெருகும் புதிய வேலை வாய்புகள் உருவாகும்.
ஏற்றமதி இறக்குமதி சிறப்படையும்.

உங்கள் ராசிக்கு தமிழ்ப்புத்தாண்டு உங்கள் ராசிக்கு அற்புதமான பலன்களை வழங்க உள்ளது. சனிபகவான் 3-ம் இடமான உபஜெய ஸ்தானத்தில் இருந்து
நற்பலன்களை வழங்குகிறார்.

கடன்சுமைகள் குறையும் நீண்ட வருடங்களாக கொடுத்து வராமல் இருந்த பணம் திடீர் என கைக்கு கிடைக்கும் பண தேவைகள் பூர்த்தியாகும்.தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த தொழில் போட்டிகள் குறையும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்கள் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும் கூட்டு தொழில்கள் லாபகரமாக அமையும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.பகைவர்கள் நண்பர்கள் ஆவார்கள்.

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும்.
குருபகவான் 6-ம் இடமான ருண ஸ்தானத்தில் இப்பதால் செலவுகளை குறைப்பது நன்று தேவை இல்லாமல் கடன்கள் வாங்கூடாது.

யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட வேண்டாம்.உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். ஜூன் 2ம் தேதி நடைபெறக்கூடிய குரு பெயர்ச்சி பலனில் குருபகவான் ராசிக்கு 7-ம் இடத்துக்கு சென்று அற்புத பலன்களை வழங்குவார். திருமண சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும்.

பண சேமிப்புகள் உண்டாகும். ராகுபகவான் இவ்வருடம் 2-ம் இடத்திலும் ராகு + கேது பெயர்ச்சியில் ராசிக்குள்ளும் வருவதால் ராகுவால் சிறப்பல்லை
வேலையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும்.வேலை சுமை காரணமாக வேலையை விடும் சூழல்கூட உருவாகும் அவரசம் கூடாது வெளிநாடுகளில் வேலை பார்க்கும் நண்பர்களும் எச்சரிக்கையாக இருக்கவும்.

உணவு வழக்கத்தில் கவனம் தேவை துரித உணவுகளை தவித்து இயற்க்கை உணவுகளை உட்கொண்டு உடல் நலனில் கவனம் கொள்ளவும் அடிக்கடி வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.

கேது 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்திலும் 7-ம் இடத்திலும் வலம் வருவதால் மனக்குழப்பங்கள் காணப்படும். வேலைக்கு செல்லும் எண்ங்கள் வராது சோம்பல் அதிகரிக்கும் ஞாபக மறதி அதிகமாக காணப்படும் அடிக்கடி ஆன்மீக பயணங்கள் கோயில் குளம் என சுற்றுவதால் சுப செலவுகள் உண்டாகும்.

பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய புதன்கிழமைகளில் லட்சுமி நரசிம்மர் அல்லது யோக நரசிம்மர் வழிபாடு செய்து வாருங்கள்
நேரம் கிடைத்தால் பௌர்ணமி திதியில் திருப்பதி சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.