சிறைத்துறை அதிகாரிகள் அழுத்தத்தில் இருக்காங்க! - அமைச்சர் நிர்மல்குமார்.
தமிழ்ப் புத்தாண்டு 2026 - கன்னி ராசி பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு வசந்த ருது-பராபவ வருடம். செவ்வாய்க்கிழமையில் சதயம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.
சதய நட்சத்திரம் ராகுவின் சாரத்தில் இருப்பதால் ராகு வெளிநாடுகளை குறிப்பதாலும் செவ்வாய் போருக்கு காரகம் என்பதாலும் வெளிநாடுகளில் அடிக்கடி உரிமை போர்களும் ஆர்பாட்டங்களும் நடக்கும். பெரிய பேரழிவுகள் உண்டாகாது.
உணவு தானியங்கள் விவசாயம் தழைத்தோங்கும். மக்களிடம் பொருளாதார முன்னேற்றம் கணப்படும் ஆடம்பர பொருட்கள் மீது மக்களுக்கு ஆசை அதிகரிக்கும். தனி நபர் கடன்கள் அதிகமாகும். விஞ்ஞான வளர்ச்சி அபரிதமாகும். தொழில் வளம் பெருகும் புதிய வேலை வாய்புகள் உருவாகும்.
ஏற்றமதி இறக்குமதி சிறப்படையும்.
உங்கள் ராசிக்கு 6-ம் இடமான உபஜெய ஸ்னத்தில் ராகுபகவான் அமர்ந்து யோக நிலைகளை வாரி வழங்குவார் புதிய தொழில் மூலம் நல்ல லாபம் பெறுவீர்கள் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் வருமானம் பன்மடங்கு உயரும் கூட்டுத் தொழில் மூலமாக லாபத்தை பெறுவீர்கள் எதிர்பாராத தன வரவுகளால் பண தேவைகள் பூர்த்தியாகும் கடன் சுமைகள் சிறுக சிறுக குறையும் டிசம்பர் மாதம் 5-ம் தேதி நடைபெறக்கூடிய ராகு+கேது பெயர்ச்சியில் ராகுபகவான் ராசிக்கு 5-ம் இடத்திற்கு பின்னோக்கி வருவதருவதால் எதிர்மறையான பலன்களை வழங்குவார் இதனால் சில சங்கடங்களும் விரையங்களும் உண்டாகும் கவனம்.
குரு பகவான் ராசிக்கு 10 -ம் இடத்தில் அமர்ந்திருந்தாலும் வருகின்ற ஜூன் மாசம் 2-ம் தேதி நடைபெறக்கூடிய குரு பெயர்ச்சி பலன்களில் குருபகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்துக்கு வருவதால் வேலை மாற்றங்கள் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைகள் கிடைக்கும் குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் நடக்கும் குழந்தை பாக்கியம் தடையின்றி கிடைக்கும் பண சேமிப்புகள் உண்டாகும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்படையும் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள் விவாகரத்து பெற்றவர்களுக்கு மறுமணம் நடக்கும் வாய்ப்பு உண்டாகும்.
கேது ராசிக்கு 12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் அமர்ந்து இருந்தாலும் டிசம்பர் மாதம் 5-ம் தேதி நடைபெறக்கூடிய ராகு + கேது பெயர்ச்சிகளில் கேது 11-ம் இடத்திற்கு பின்னோக்கி செல்வதால் திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் தேக்க நிலையில் இருந்து வந்த வேலைகள் முடிவடையும் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் கோயில் வழிபாட்டு தளங்களுக்கு சென்று வருவீர்கள்.
ராசிக்கு 7-ம் இடமான கண்டக ஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்து சில மன குழப்பங்கள் உண்டு பண்ணுவார் குடும்பத்துக்குள் தேவையில்லாத பூசல்கள் உருவாகும் யாருக்கும் ஜாமீன் எழுத்தில் போடாதீர்கள் சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்துப் போகவும் பெரிய மனிதர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள் ஆடம்பர செலவுகளால் பண விரையங்கள் உண்டாகும் தாய் தந்தை உடல் நல பாதிப்புகள் மருத்துவ செலவுகள் உண்டாகும் கவனம்.
பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு அர்ச்சனை செய்து வாருங்கள் இயலாதவர்களுக்கு உணவும் உடையும் வாங்கி தாருங்கள் நல்லதே நடக்கும்