தமிழ்ப் புத்தாண்டு 2026 - மிதுனம் ராசி பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு வசந்த ருது-பராபவ வருடம். செவ்வாய் கிழமையில் சதயம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.
சதய நட்சத்திரம் ராகுவின் சாரத்தில் இருப்பதால் ராகு வெளிநாடுகளை குறிப்பதாலும் செவ்வாய் போருக்கு காரகம் என்பதாலும் வெளிநாடுகளில் அடிக்கடி உரிமை போர்களும் ஆர்பாட்டங்களும் நடக்கும். பெரிய பேரழிவுகள் உண்டாகாது.
உணவு தானியங்கள் விவசாயம் தழைத்தோங்கும். மக்களிடம் பொருளாதார முன்னேற்றம் கணப்படும் ஆடம்பர பொருட்கள் மீது மக்களுக்கு ஆசை அதிகரிக்கும். தனி நபர் கடன்கள் அதிகமாகும். விஞ்ஞான வளர்ச்சி அபரிதமாகும். தொழில் வளம் பெருகும் புதிய வேலை வாய்புகள் உருவாகும்.
ஏற்றமதி இறக்குமதி சிறப்படையும்.
உங்கள் ராசிக்கு சனிபகவான் 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் புதிய தொழில் முதலீடுகள் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும்
வியாபார யுக்திகளை கையாண்டு லாபம் பன்மடங்கு உயரும் பங்காளிகளுக்குள் இருந்து வந்த மனஸ்தாபங்கள் அகலும்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் கொடுத்த பணம் வசூல் ஆகும்.
ராசிக்குள் இருக்கும் குருபகவான் ஜூன் மாதம் 2ம் தேதி ராசிக்கு 2-ம் இடமான உச்ச வீடான தன ஸ்தானத்துக்கு வருகிறார் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் திருமண சுப காரியங்கள் நடக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் கணவன் மனைவி உறவு பலப்படும் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும் பண தேவைகள் பூர்த்தியாகும் நினைத்த காரியம் யாவும் கை கூடும்.
ராசிக்கு 3-ம் இடத்தில் கேது பகவான் மூன்றாம் இடம் என்பது தைரிய ஸ்தானத்தானமாக இருப்பதால் தன்னம்பிக்கையும் தைரியமும் பிறக்கும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் ஆன்மீக எண்ணங்கள் உதிக்கும் ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
வெளிநாடு சென்று படிக்கவும் அங்கு வேலை கிடைக்கவும் வாய்புகள் உண்டும்.
டிசம்பர் 5-ம் தேதி ராகு + கேது பெயர்ச்சியில் கேது 2-ம் வீட்டுக்கு பின்னோக்கி வருவது சிறப்பில்லை.
ராகுபகவான் 9-ம் இடத்தில் இருப்பதால் தந்தை மகனுக்குள் கருத்து மோதல்கள் உருவாகும் பூர்வீக சொத்து பிரச்சனைகள் உண்டாகும் வேலை விஷயமாக குடும்பத்தை பிரிந்து வெளியூர் வெளிநாடுகளில் தங்கும் சூழல் உருவாரும் வருமானம் நன்றாக இருந்தாலும் வரவுக்கேற்ப செலவுகளும் உண்டு.
டிசம்பர் 5ம் தேதிக்கு பிறகு 8ம் இடமான அஷ்டம ஸ்தானத்துக்கு பின்னோக்கி செல்கிறார் பண விவகாரங்களில் கவனம் தேவை சில பல குழப்பங்கள் உண்டாகும் கவனத்துடன் செயல்படவும்.
பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய புதன்கிழமைகளில் நவகிரக புதன்வழிபாடும் நரசிம்மர் வழிபாடும் செய்து வாருங்கள்.
நேரம் கிடைத்தால் ஆயில்யம்.கேட்டை.ரேவதி நட்சத்திரநாளில் திருவெண்காடு புதன் ஸ்தலத்துக்கு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.