27 நட்சத்திரமும் 27 மலர்களும்!

27-natchathiram-27-malargal
27 நட்சத்திரமும் 27 மலர்களும்!

நட்சத்திர ஜோதிடத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்தனி மலர்கள் குறிக்கப்பட்டுள்ளன. உங்கள் நட்சத்திரத்திலிருந்து 2, 11, 20 இடத்தில் வரும் நட்சத்திரங்கள் உங்கள் சம்பத்து தாரைகள்.

அந்த சம்பத்து தாரை நட்சத்திரத்திற்குரிய மலரை தெய்வத்திடம் சமர்ப்பித்து வழிபட்டால்,

பணச்சிக்கல்
கடன் சுமை
சேமிப்பு கரைதல்
உழைப்பு வீண் போதல்
உத்தியோக/தொழில் முன்னேற்ற தடை
பொருளாதார நெருக்கடி
போன்றவற்றிலிருந்து வெளிவரும் வாய்ப்பு அதிகமாகும்.

உதாரணமாக,
இன்றைய தினம் பூரட்டாதி நட்சத்திரத்தின் சம்பத்து தாரை உத்திரட்டாதி நட்சத்திரம் ஆகும். உத்திரட்டாதி நட்சத்திர மலர் நந்தியாவட்டை பூ.

அதனால் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பசுபதீஸ்வரருக்கு நந்தியாவட்டை பூவையும், மாலையும் சமர்ப்பித்து வழிபடலாம். இது சம்பத்து வளர்ச்சிக்கு மிக உகந்தது.

இருபத்தியேழு நட்சத்திரங்களின்
தனித்தனி மலர்கள்...*
அஸ்வினி – சாமந்தி
பரணி – முல்லை
கார்த்திகை – செவ்வரளி
ரோகிணி – பாரிஜாதம்
மிருகசீரிடம் – ஜாதிமல்லி
திருவாதிரை – வில்வப் பூ
புனர்பூசம் – மரிக்கொழுந்து
பூசம் – பன்னீர் மலர்
ஆயில்யம் – செவ்வரளி
மகம் – மல்லிகை
பூரம் – தாமரை
உத்திரம் – கதம்பம்
அஸ்தம் – வெண் தாமரை
சித்திரை – மந்தாரை
சுவாதி – மஞ்சள் அரளி
விசாகம் – இருவாட்சி
அனுஷம் – செம்முல்லை
கேட்டை – பன்னீர் ரோஜா
மூலம் – வெண்சங்கு மலர்
பூராடம் – விருட்சி
உத்திராடம் – சம்பங்கி
திருவோணம் – சிவப்பு ரோஜா
அவிட்டம் – செண்பகம்
சதயம் – நீலோற்பலம் (கருங்குவளை)
பூரட்டாதி – வெள்ளரளி
உத்திரட்டாதி – நந்தியாவட்டை
ரேவதி – செம்பருத்தி

உங்கள் நட்சத்திரத்திற்குரிய மலரை அறிந்து, சம்பத்து தாரை தெய்வத்தை வழிபடுங்கள். செல்வமும் சாந்தியும் நிரம்பும்.