இன்றைய ராசி பலன்கள் - 17.03.2026 செவ்வாய் கிழமை
மேஷம்
புதியவரின் நட்பால் உற்சாகம் ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். குடும்பத்துடன் இருப்பீர்கள் அவர்களின் விருப்பங்களை நிறைவு செய்வீர்கள்.
ரிஷபம்
குடும்பத்தில் சில மருத்துவ செலவுகள் வரும். எதிர்பார்த்த காரியம் தாமதமின்றி நடக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும்.கணவன் மனைவி ஒற்றுமை நிலைக்கும் சுப விரையத்தால் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம்
குடும்ப வாழ்வில் நன்மை உண்டாகும். பிராத்தனைகள் நிறைவேறும். பண தேவைகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும் குடும்பத்தாரின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள் .
கடகம்
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்லவும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். உடல் நலம் சீராகும். சுப விரைய சிலவுகள் உண்டாகும்.
சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.
சிம்மம்
குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். மன சஞ்சலம் நீங்கி மனமகிழ்ச்சி ஏற்படும். கடன் பிரச்சனை குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
நண்பர்கள் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும்.
கன்னி
குடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பயணங்களால் அலைச்சல் கூடும். வண்டி வாகனங்களில் போகும் பொழுது கவனம் செலுத்தவும் பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பர்.உறவினர்கள் உதவி கிடைக்கும்.பண தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
துலாம்
குடும்ப வேலைகள் முடிவடையும். உறவினர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். பெண்கள் வழியில் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.தொழில் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. வீடு, மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
எதாவது ஒரு வழியில் பணம் வரும் மனைவி பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு
குடும்ப பெரியோர்களின் ஆசி கிட்டும். சவாலான காரியங்களை கூட எளிதில் செய்ய முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்., உறவினர்களின் உதவி கிடைக்கும்.மன மகிழ்ச்சி உண்டாகும். உத்யோகத்தில் வேலை பளூ அதாகமாகும்.
மகரம்
எதிர்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய திட்டங்களை தீட்டுவீர்கள் பண தேவைகள் பூர்த்தியாகும்.புது பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.காரிய தடை விலகும்.
கும்பம்
அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். நீண்ட நாள் விருப்பங்கள். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
ஆபரணம் புத்தாடை யோகமும் உண்டு.
மீனம்
குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க பழகவும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.