சிம்புவுக்கு திருமணமே நடக்காதாம்? - அனிருத் திருமணத்தை கணித்த ஜோதிடர்!
அனிருத்துக்கும், காவ்யா மாறனுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணமே செய்துகொள்ள மாட்டாரோ என சந்தேகப்பட்ட அனியே திருமணம் செய்யவிருக்கிறார். ஆனால் சிம்பு இன்னும் அந்த அத்தியாயத்துக்குள் செல்லவில்லை. இந்நிலையில் அனிருத்தின் மண வாழ்க்கை குறித்து பல வருடங்களுக்கு முன்பே சரியாக கணித்த ஜோதிடர் ஜெயஸ்ரீ இப்போது சிம்புவுக்கும் கணித்திருக்கிறர்.
தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக சிங்கிளாக இருப்பவர் சிம்பு. முதலில் நடிகை நயன்தாராவை காதலித்தார். இரண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் செய்யும் பிளானில் தந்தை டி.ராஜேந்தர் இருக்கும்போது; இரண்டு பேரும் பிரேக் அப் செய்துகொண்டார்கள். அந்தக் காதல் பிரிவு அப்போதைக்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஏகப்பட்ட கதைகள் அதை சுற்றி எழுதப்பட்டன. அந்த உறவுக்கு பிறகு சில வருடங்களில் நடிகை ஹன்சிகாவை காதலித்தார் எஸ்டிஅர்.
உறுதி கொடுத்த ஜோடி: காதலிக்க தொடங்கியவுடன் இரண்டு பேரும் நிழலாக பயணமானார்கள். ஒன்றாக பிறந்தநாள் கொண்டாடியது, அடிக்கடி வெளியே செல்வது என ஜாலியாக இருந்த அந்த ஜோடி; நாங்கள் அஜித் - ஷாலினி போல் இருப்போம் என உறுதியும் கொடுத்தது. இவ்வளவு கான்ஃபிடென்ட்டாக சொல்லியதை பார்த்து சந்தோஷப்பட்ட டி.ஆர் இந்த முறையும் திருமண வேலைகளை தொடங்கினார். ம்ஹூம் இந்த ஜோடி பிரிந்துவிட்டது. அதற்கு பிறகு சிம்புவின் பயணம் ஆன்மீகத்துக்குள் சென்று இப்போது மீண்டும் சினிமாவுக்குள் வந்திருக்கிறது.
அரசன் சிம்பு: மாநாடு, வெந்து தணிந்தது காடு என ஹிட் படங்களை கொடுத்த அவர்; கடைசியாக தக் லைஃப் படத்தில் சறுக்கினார். இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். படமானது அடுத்த வருடத்தில் ரிலீஸாகும் என்று தெரிகிறது. இதனை முடித்துவிட்டு அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அவருக்கு இப்போது 43 வயது ஆகிறது. வாழ்க்கை மூப்பின் இரண்டாவது கட்டத்தில் இருந்தாலும் அவர் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
கணித்த ஜோதிடர்: இந்நிலையில் பிரபல ஜோதிடரான ஜெயஸ்ரீ தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "சிம்பு அப்படியே லிவிங்கில் போயிட வேண்டியதுதான். திருமணம் இரண்டு விதம். ஒன்று அப்பா, அம்மா பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்வது. இன்னொன்று கந்தர்வமாக திருமணம் செய்துகொள்வது. கந்தர்வம் என்றால் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொள்வது. இப்படித்தான் பெரியவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். அவருக்கு திருமணம் ஆகாது" என்றார்.
சரியாக கணித்தவர்: முன்னதாக பத்து வருடங்களுக்கு முன்பு தனியார் சேனல் ஒன்றில் அனிருத்துக்கு வரப்போகும் பெண் குறித்து சரியாக கணித்திருந்தார் ஜெயஸ்ரீ. அவர் என்னவெல்லாம் சொன்னாரோ அப்படியே காவ்யா மாறனுக்கு பொருந்துகிறது. அவர்கள் இரண்டு பேரும் நவம்பர் 11ஆம் தேதி திருமணம் செய்துகொள்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் திருமணமே செய்துகொள்ளமாட்டார்கள் போல என்று நினைத்த பிரேம்ஜி, அனிருத் ஆகியோரெல்லாம் குடும்பஸ்தனாக மாறிவிட்டார்கள். அவர்களுக்கெல்லாம் சீனியரான சிம்பு இன்னமும் சிங்கிளாகவே சுற்றி வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் ஜெயஸ்ரீயின் இந்த கணிப்பும் பலித்துவிடுமோ என எஸ்டிஆர் ரசிகர்கள் சோகமடைந்திருக்கிறார்கள்.