மார்ச் 2026 மாத ராசி பலன் - மீன

march-2026-rasi-palan-meenam
மார்ச் 2026 மாத ராசி பலன் - மீன

12 மற்றும் ஒன்றாம் இடங்களில் சுக்கிரன் பலம் பெற்று சஞ்சரிப்பதால் பண தேவைகள் பூர்த்தியாகும் குடும்பத்தில் சந்தோஷம் மகிழ்ச்சியும் உண்டாகும் புதிய வாகன யோகமும் உண்டு.

12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதால் திடீர் தன வரவுகள் உண்டாகும் நினைத்த காரியம் யாவும் வெற்றியைத் தேடித் தரும் பங்குச்சந்தை லாபம் மற்றும் ஓய்வூதிய பணங்கள் கைக்கு கிடைக்கும்.

ராசிக்கு 6-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் அடிக்கடி கோயில் தலங்களுக்கு சென்று வருவீர்கள் வெளிநாடு தொடர்புடைய வியாபாரங்கள் லாபத்தை பெற்றுத்தரும்.

12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் ராகு அமர்ந்திருப்பதால் புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள் பண விவகாரங்களில் மிகுந்த கவனம் செலுத்தவும் இம்மாதம் சூரியனும் 12 மற்றும் ஒன்றாம் இடங்களில் பலவீனப்படுவதால் சோம்பலுடன் காணப்படுவீர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும் முடிந்த அளவு வீட்டு உணவை உட்கொள்ளவும்.

ராசிக்குள் சனிபகவான் அமர்ந்து ஜென்ம சனியாக நடப்பதால் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் யோசித்து முடிவு எடுங்கள் அவசர முடிவுகளை தவிர்க்கவும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போடாதீர்கள்.

நான்காம் வீட்டில் குரு பகவான் சஞ்சரிப்பதால் தாயாரின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும் தொழில் வியாபாரங்கள் சீராக இருக்கும் உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும் கவனம்.

இம்மாதம் செவ்வாய் 12-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் முன் கோபம் அதிகமாக காணப்படும் யாரையும் எடுத்தெறிந்து பேசி விடாதீர்கள் சகோதரருக்குள் விட்டுக் கொடுத்து போகவும் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம்.

மார்ச் 7,8,9 சந்திராஷ்டமம்.

பரிகாரம்
வாரம் தோறும் வரக்கூடிய
திங்கட்க்கிழமைகளில் பெருமாள் வழிபாடும் நவகிரக சந்திரனுக்கு அர்ச்சனையும் செய்து வரவும். நல்லதே நடக்கும்.