மார்ச் 2026 மாத ராசி பலன் - தனுசு

march-2026-rasi-palan-thanusu
மார்ச் 2026 மாத ராசி பலன் - தனுசு

மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் தைரியம், இளைய சகோதர உறவுகள், மற்றும் சுறுசுறுப்பைக் குறிக்கும். இது பொதுவாக நன்மை தரும் அமைப்பாகக் கருதப்படுகிறது, ஏனெனில் செவ்வாய் ஒரு துணிச்சலான கிரகம் மற்றும் 3-ம் வீடு பராக்கிரம ஸ்தானமாகும். இவர்களுக்கு உடன்பிறப்புகளுடன் சிறிய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நெருக்கமான உறவு இருக்கும்.

7-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் திருமணங்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.

3-ம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்யப்படுவதற்கு நல்ல வேலை கிடைக்கும்.
மருத்துவ விரையங்கள் கட்டுக்குள் வரும்.

இம்மாதம் முற்பாதி வரை சூரியன் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்.
4-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் தாயாரின் உடல் நலத்தில் பிரச்சனைகள் வரக்கூடும் தாயாருக்கு மருத்துவ விரைய செலவுகள் உண்டாகும்.

இம்மாதம் சுக்கிரனும் 3-ம் இடத்தில் பலவீனமாக காணப்படுவதால் கணவன் மனைவிக்குள் தேவையில்லாத பிரச்சனைகள் வரக்கூடும் குடும்ப உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும்.

இம்மாதம் புதன் மூன்றாம் இடத்தில் பலவீனப்படுவதால் ஞாபகம் மறதி அதிக அளவில் காணப்படும் பண விஷயத்தில் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் தந்தையாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும் வீண் விவாதங்கள் தவிர்கவும்.

மார்ச்.1,2 மற்றும் 27,28,29 தேதிகளில் சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் குருபகவான் வழிபாடும் பௌர்ணமி திதியில் சித்தர் வழிபாடும் செய்து வரவும் நல்லதே நடக்கும்.