சிறைத்துறை அதிகாரிகள் அழுத்தத்தில் இருக்காங்க! - அமைச்சர் நிர்மல்குமார்.
மார்ச் 2026 மாத ராசி பலன் - சிம்மம்
வருட கோள்களில் குருபகவான் 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் திருமண சுப காரியங்கள் நடக்கும் பண சேமிப்புகள் உண்டாகும் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு.
இந்த மார்ச் மாதம் வேறு எந்த கோள்களும் உங்கள் ராசிக்கு சாதகமான பலன்களை வழங்காது.
ராசிக்குள் கேது இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும் புதிய முயற்ச்சிகள் தவிற்க்கவும்.
முன் யோசனையின்றி எதையும் செய்யாதீர்கள். 7ம் இடத்தில் ராகு இருப்பதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் வரக்கூடும் புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் உஷாராக இருக்கவும்.
அஷ்டமச்சனி நடப்பதால் பண விவகாரங்களில் கவனமாக இருக்கவும் யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள் சொத்து பிரச்சனைகள் வரக்கூடும் கவனம்.
இம்மாதம் சூரியன் 7 மற்றும் 8-ம் இடங்களில் பலவீனப்படுவதால் அடுத்தவர்களின் பிரச்சனையில் தலையிட வேண்டாம் வீண் வம்பு வழக்குகளில் மாட்டிக்கொள்வீர்கள்.
7ல் செவ்வாய் இருப்பதால் முன்கோபம் அதிகமாக காணப்படும் சகோதரர்களுக்குள் மன கசப்புகள் வரக்கூடும்.
இம்மாதம் சுக்கிரன் 7 ம் இடத்தில் காணப்படுவதால் பெண்களால் சங்கடங்கள் உண்டாகும்.
பழைய வண்டி வாகனங்கள் செலவு வைக்கும். புதனும் 7 ம் இடத்தில் பலவீனப்படுவதால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும் சோம்பல் அதிகரிக்கும் பங்குசந்தை முதலீடுகள் நஷ்டத்தை உண்டு பண்ணும் கவனத்துடன் இருக்க வேண்டிய மாதமிது.
மார்ச் 19,20,21.சந்திராஷ்டமம்
பரிகாரம்
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு விளக்கெண்ணை தீபமேற்றி வழிபாடு செய்து வரவும் தேய்பிறை அஷ்டமி வழிபாடும் சிறப்பைத்தரும் நல்லதே நடக்கும்.