இன்றைய ராசி பலன்கள் - (27-01-2026 செவ்வாய் கிழமை)
மேஷம்
குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும். முன் கோபத்தை குறைத்துக்கொள்ளவும். கடன் பிரச்சனை தலைதூக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
ரிஷபம்
குடும்பத்தில் உங்கள் புகழ் ஓங்கும். புது நண்பர்கள் அறிமுகமாவர். உறவினர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மிதுனம்
குடும்பத்தில் திடீர் செலவுகள் வரும். வாக்கு சாமர்த்தியம் உண்டாகும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
கடகம்
குடும்பத்தில் அனுசரணை அதிகம் தேவை. பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.
சிம்மம்
மனம் விரும்பியதை செய்ய முடியும். பிரியமானவர்கள் வழியில் அனுகூலம் உண்டு. நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
எதிரிகளின் பலம் பாதியாக குறையும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்
கன்னி
குடும்ப தேவைகள் அதிகமாகும். மனதில் இருந்த குழப்ப நிலை நீங்கும். பெற்றோர்களிடம் விவாதம் செய்ய வேண்டாம். உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும்.வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
துலாம்
பயணங்களால் பயனடைய முடியும். அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்
சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். குடும்ப நிதி நிலைமை சீரடையும். திட்டமிட்ட காரியத்தை சிறப்பாக செய்ய முடியும். நெருக்கமானவர்களின் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் குறையும்.
தனுசு
பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். சூழ்நிலைகள் சாதகமாக அமையும்.பண தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே,பண தேவைகள் பூர்த்தியாகும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கும்பம்
தேவையற்ற விஷயங்களை நினைத்து குழம்ப வேண்டாம்.கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் உண்டாகும்.
முக்கிய வேலைகள் முடிவடையும். உணவு கட்டுப்பாடு அவசியம். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்
மீனம்
குடும்ப வாழ்வில் சில நெருக்கடிகள் வரலாம். தியானம் மன நிம்மதியை தரும். தேவையின்றி கடன் வாங்க வேண்டாம் நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.