இன்றைய ராசி பலன்கள் (24-01-2026 சனிக் கிழமை)
மேஷம்
நீண்ட நாள் கனவு நினைவாகும். பிரியமானவர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். புது நபர்களிடம் கவனமாக பழகவும்.வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.
ரிஷபம்
உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும்.புதிய வண்டி வாகனம் வாங்கும் எண்ணம் பிறக்கும். பொழுதுபோக்கு அம்சங்களில் நாட்டம் உண்டாகும். கடன் நெருக்கடி இருக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
மிதுனம்
பல வேலைகளை சேர்த்து பார்க்க வேண்டிவரும். பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பர். சாலைகளை கவனமாக கடந்து செல்லவும். பண விவகாரங்களில் கவனம் தேவை.உத்யோகத்தில் வேலை பளு கூடும்.
கடகம்
குடும்ப வரவு செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். சொந்த விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம். யாருக்காகவும் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில் விபயாரத்தில் நல்ல லாபத்தை காணலாம்.
சிம்மம்
உங்கள் முயற்சிக்குண்டான பலன் கிடைக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். புது பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும்.
தொழில் வியாபாரங்கள் சீராக இருக்கும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
கன்னி
குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மறுப்பு இருக்காது. மனதில் இருந்த வீண் கவலை அகலும்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரம் செழிப்படையும்.
துலாம்
குடும்பத்தில் பொருள் சேர்க்கை உண்டாகும். முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். சொந்த பந்தங்கள் நாடி வருவர். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். ஞாபகமறதி தொல்லை இருக்கும்.கடன் வாங்கவும் கொடுக்கவும் யோசித்து முடிவெடுக்கவும் அவசர புத்தியால் விரையங்கள் ஏற்படும். பெற்றோர்களின் அரவணைப்பு கிட்டும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
தனுசு
காரிய தடைகள் விலகும். குடும்பத்தாரால் சிறு சிறு பிரச்னைகள் வந்து நீங்கும்.கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனை தலைதூக்கும். புதியவரின் நட்பால் உற்சாகம் ஏற்படும். மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மகரம்
புத்தி கூர்மையால் தடைபட்ட காரியம் நிறைவேறும்.தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். திருமண சுப நிகழ்ச்சி பேச்சுக்கள் கைகூடும்.உறவினர்கள் வகையில் சில நன்மைகள் உண்டு. தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
கும்பம்
குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. பயணங்களால் அலைச்சல் ஏற்படும். வரவுக்கேற்ற சிலவுகளும் உண்டாகும்.எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை நீங்கும்.
மீனம்
முக்கிய வேலைகள் முடிவடையும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம்.
உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.பண விவகாரங்களில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.