பிப்ரவரி 2026 மாத ராசி பலன் - மேஷம்

february-2026-month-rasi-palan-rishabam
பிப்ரவரி 2026 மாத ராசி பலன் - மேஷம்

சூரியன் 10 மற்றும் 11'ம் இடங்களில் பலம் பெற்று வலம் வருவதால் அரசாங்க அனுகூலங்கள் உண்டாகும் அரசியல் செல்வாக்கு கூடும் காரிய தடைகள் விலகும் தொழில் வியாபாரம் சிறப்படையும் போட்டி தேர்வுகள் எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

பெரிய மனிதர்கள் சந்திப்பும அவர்களால் உதவியும் கிடைக்கும் தந்தை மகன் உறவு பலப்படும் இம்மாதம் புதனும் ராசிக்கு 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் கூட்டுத் தொழில்கள் சிறப்படையும் தனது புத்தி கூர்மையால் எதையும் சாதித்து காட்டுவீர்கள்.

ஷேர்மார்கெட் ட்ரேடிங் ஆன்லைன் வியாபாரங்கள் களைகட்டும்.
ஐ.டி த்துறையில் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்புகள் உருவாகும்.

பிப்ரவரி 23.ம் தேதிவரை செவ்வாய் பலவீனமாக கணப்படாலும் 23ம் தேதிக்கு பிறகு 10-ம் இடத்துக்கு வருவதால் சகோதர வழியில் ஆதாயம் காணலாம்.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூட்டவீர்கள் பதக்கங்கள் வெல்வீர்கள்.

வருட கோள்களில் கேது பலம் இழந்து பெற்று 5-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் மனக்குழப்பங்கள் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்க வேண்டாம்.
ராகு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் மூத்த சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும் வரவு சிலவு கணக்கு சிறப்பை தரும் புதிய முதலீடுகளால் நல்ல லாபத்தை பெற முடியும் பூர்வீசொத்து மனை நிலங்களால் ஆதாயம் காணலாம்.

இம்மாதம் சுக்கிரன் 10ம் இடத்தில் பலவீனமாக இருப்பதால் பெண்களால் பிரச்சனைகளும் வம்பு வழக்குகளும் உண்டாகும்.
சில அவமானங்களும் நேரக்கூடும்.பழைய வண்டி வாகனங்கள் சிலவு வைக்கும் கவனம் தேவை.

ராசிக்கு 3-ல் குருபவான் சஞ்சரிப்பதால் ஆடம்பர சிலவுளை குறைத்து சேமிப்பில் ஆர்வம் காட்டுங்கள் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போடாதீர்கள்.
கணவன் மனைவிக்குள் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிற்பது நலம்.

12ம் இடமான விரைய ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் சுப விரையங்கள் செய்வது நல்லது.
வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்காது.கடுமையாக உழைக்க வேண்டி வரும்.

பிப்:10.11.12 ம் தேதிகளில் சந்திராஷ்டமம்

பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் ஹனுமனுக்கு வெற்றிமாலை அணிவித்து அர்ச்சனை செய்து வரவும் நல்லதே நடக்கும்.